ARTICLE AD BOX
தர்மபுரி: தர்மபுரியில், முலாம்பழம் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை, கோடை வெயில் கொளுத்தும். நடப்பாண்டு கோடைக்கு முன்பாகவே வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், வெள்ளரிக்காய் மற்றும் தர்ப்பூசணி, முலாம்பழம் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது. தர்மபுரி சந்தையில் முலாம்பழம் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. ஒருகிலோ ₹30 முதல் ₹40 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி முதல் வெயில் கொளுத்தி வருகிறது.
அதிகபட்சமாக கடந்த 19ம் தேதி 93.5 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 91.7 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியது. இதனால், தர்பூசணி, நுங்கு வாங்கி சாப்பிட்டு மக்கள் உடல்சூட்டை தணித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது முலாம்பழம் விற்பனைக்கு வந்துள்ளது. தர்மபுரி சந்தையில் விற்பனைக்கு குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ ₹40 வரையில் விற்கப்படுகிறது என்றனர்.
The post தர்மபுரி மாவட்டத்தில் முலாம்பழம் விற்பனைக்கு குவிப்பு appeared first on Dinakaran.