தம்பி ஜியோ, ஏர்டெல் ஓரம்போங்க.. முக்கிய சேவையை வழங்கி Vodafone Idea.. எங்கு தெரியுமா?

3 hours ago
ARTICLE AD BOX

தம்பி ஜியோ, ஏர்டெல் ஓரம்போங்க.. முக்கிய சேவையை வழங்கி Vodafone Idea.. எங்கு தெரியுமா?

News
oi-Prakash S
| Published: Thursday, February 27, 2025, 21:50 [IST]

இந்தியாவில் ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி சேவையை வழங்கிவிட்ட நிலையில், வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமும் 5G சேவைையை வழங்கி உள்ளது. அதாவது மும்பையில் வோடபோன் ஐடியாவின் 5ஜி சோதனை தொடங்கி உள்ளதால், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் 5ஜி சேவை பயன்படுத்த முடிகிறது.

மேலும் வோடபோன் ஐடியா (vi) வாடிக்கையாளர்கள் சமூகவலைத்தளங்களில் 5ஜி சேவை கிடைத்தது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதுவும் 5G ஆக்டிவேஷன் (activation) எஸ்எம்எஸ், 5G நெட்வொர்க் லோகோ போன்ற ஸ்கிரீன் ஷாட்களை பயனர்கள் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பி ஜியோ, ஏர்டெல் ஓரம்போங்க.. முக்கிய சேவையை வழங்கி Vodafone Idea..

குறிப்பாக சில பயனர்கள் 5G நெட்வொர்க்குடன் இணைக்கப்படும்போது 250Mbps க்கும் அதிகமான வேகத்தைப் பெறுவதாகக் கூறியுள்ளனர். மேலும் சிலர் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று கூறி வருகின்றனர். அதேபோல் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியை ஏற்படுத்து வகையில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5ஜி சேவை வெளிவந்துள்ளது.

மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் தனது 5ஜி சேவையை வரும் 2025 ஏப்ரல் மாதம் முதல் டெல்லி (Delhi), பெங்களூரு (Bengaluru), சென்னை (Chennai) மற்றும் பாட்னா (Patna) உள்ளிட்ட பல நகரங்களுக்கு விரிவுபடுத்தும் என்று தெரிவித்துள்ளது. பின்பு தமிழ்நாட்டில் வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் வோடபோன் ஐடியாவின் சில பட்ஜெட் விலை திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (vodafone idea rs 979 plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் வோடபோன ஐடியாவின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டம் சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), பிளேஃபிளிக்ஸ், மனோரமா உட்பட 16 ஓடிடி ஆப்ஸ்களின் அணுகலை வழங்குகிறது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) சலுகை வழங்குகிறது இந்த வோடபோன் ஐடியா ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 64கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும்.

மேலும் இதில் பிஞ்ச் ஆல் நைட் (Binge All Night) டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகையில் நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்த முடியும். இதுதவிர வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் சலுகைகள் வோடபோன் ஐடியா ரூ.979 திட்டத்தில் கிடைக்கிறது.

தம்பி ஜியோ, ஏர்டெல் ஓரம்போங்க.. முக்கிய சேவையை வழங்கி Vodafone Idea..

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (vodafone idea rs 449 plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் வோடபோன ஐடியாவின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), பிளேஃபிளிக்ஸ், மனோரமா உட்பட 16 ஓடிடி ஆப்ஸ்களின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) சலுகை வழங்குகிறது வோடபோன் ஐடியா ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்.மற்றபடி ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் சலுகைகள் இந்த திட்டத்திலும் கிடைக்கும் என்பது
குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Vodafone Idea 5G network goes live in Mumbai: check details here
Read Entire Article