ARTICLE AD BOX
தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியம் சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
47 ASSISTANT SURGEON காலி பணியிடங்களை நிரம்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இளநிலை பல் மருத்துவம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் 37 வயதுக்குட்ப்பட்டவர்களே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளமாக 56 ,100 ரூபாயில் இருந்து 2, 05, 700 ரூபாய் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ASSISTANT SURGEON விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பல் மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . கடைசி தேதி 17.03.2025 இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.