ARTICLE AD BOX
2 ரயில் நிலையங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ரயில் நிலையங்களுக்கான கோடு அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். தினமும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான ரயில் நிலையங்கள் 24 மணி நேரமும் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது திருவனந்தபுரம் அருகில் உள்ள கொச்சுவேலி (Kochuveli) ரயில் நிலையம் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையம் (Thiruvananthapuram North) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கொச்சுவேலி சுமார் 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

திருவனந்தபுரம் சென்ட்ரல் பிசியான ரயில் நிலையமாக செயல்பட்டு வரும் நிலையில், கொச்சுவேலி 2வது ரயில் முனையமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு இருந்து மைசூரு, மங்களூரு உள்பட நாட்டின் பல்வேறு இடங்களுக்கு ரயில்கள் புறப்பட்டுச் செல்கின்றன. திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதியாக கெச்சுவேலி இருந்தாலும் வெளிமாநில பயணிகள் கொச்சுவேலிக்கும், திருவனந்தபுரத்துக்கும் அதிக தொலைவு இருப்பதாக நினைத்தனர்.
இதனால் திருவனந்தபுரம் வரும் வெளிமாநில பயணிகள், வடமாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில் கொச்சுவேலி ரயில் நிலையத்தின் பெயரை மாற்றும்படி கேரள மாநில அரசு மத்திய உள்துறை அமைச்சத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்று கொச்சுவேலி ரயில் நிலையம் திருவனந்தபுரம் வடக்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜல்பைகுரி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து; ஒடிசாவில் தடம் புரண்டது!

கொச்சுவேலியில் இருந்து மும்பை, மைசூரு, மங்களூரு, பெங்களூரு, நிலம்பூர் உள்பட பல்வேறு இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அந்த ரயில்களிலும் கொச்சுவேலி என்பதற்கு பதிலாக திருவனந்தபுரம் வடக்கு என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தின் கோடு (Code) TVCN என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி திருவனந்தபுரம் அருகே 5 கிமீ தொலைவில் திருவனந்தபுரம் நாகர்கோவில் வழித்தடத்தில் அமைந்துள்ள நேமம் (Nemom) ரயில் நிலையமும் திருவனந்தபுரம் தெற்கு (Thiruvananthapuram South) என பெயர் மாற்றப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் தெற்கு ரயில் நிலையத்தின் கோடு TVCS என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு ரயில் நிலையங்களின் பெயர்களும் சில மாதங்களுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இப்போது ரயில் நிலைய பெயர் கோடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நெரிசலை குறைக்கும் வகையில் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை போன்று திருவனந்தபுரம் தெற்கு ரயில் நிலையத்தையும் ஒரு முனையமாக பயன்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கொச்சுவேலி ரயில் நிலைய பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில்,இனிமேல் பயணிகளின் எண்ணிக்கையையும் வருவாயும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை கடற்படையால் 32 தமிழக மீனவர்கள் கைது: ராமேஸ்வரத்தில் கொந்தளிப்பு!