தமிழ்நாடு இல்லாமல் மோடி இதை சாத்திக்கவே முடியாது..!!

13 hours ago
ARTICLE AD BOX
  செய்திகள்

தமிழ்நாடு இல்லாமல் மோடி இதை சாத்திக்கவே முடியாது..!!

News

சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஜெட்வெர்க் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஆலையின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, மின் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், ஜெட்வெர்க்கின் மின்னணு வணிகத் தலைவர் ஜோஷ் ஃபோல்கர், தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரி அம்ரித் ராஜ் மற்றும் ஜெட்வெர்க்கின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அம்ரித் ஆச்சார்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மின் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பேசுகையில் கூறியதாவது: இந்த நிகழ்வில் பங்கேற்பதில் மிகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுக்கு 50,000 கோடி டாலர் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை அடைவதற்கான லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளார்.

தமிழ்நாடு இல்லாமல் மோடி இதை சாத்திக்கவே முடியாது..!!

தமிழ்நாட்டின் முழு பங்களிப்பு இல்லாமல் இந்த இலக்கை அடைவது மிகவும் கடினம். இந்த இலக்கில் 20 சதவீதம் அல்லது கால் பங்கை இந்த பிராந்தியத்தின் உற்பத்தி மூலம் அடைய வேண்டும்.

உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உயர்தர மனித வளங்களை கருத்தில் கொண்டு, பல மின்னணு உற்பத்தியாளர்கள் இங்கு ஒரு ஆலையை நிறுவன ஆர்வமாக உள்ளனர்.

இந்த பகுதிக்கு தொழில்களை ஈர்க்கும் மிக முக்கியமான காரணி மனித வளங்களின் தரம் மற்றும் உற்பத்தியாளர்களை உலகளவில் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதிலும் ஏற்றுமதி செய்வதிலும் ஆதரிக்கும் திறன் ஆகும். இது தமிழ்நாட்டின் தலைமைத்துவத்தில் மற்றொரு இறகு.

ஜெட்வெர்க் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 7வது தொழிற்சாலையான இந்த தொழிற்சாலை, மாநிலத்தின் பெருமையில் மற்றொரு சிறப்பம்சமாகும். இந்நிறுவனத்தின் இந்த புதிய ஆலை, மின்னணு உற்பத்தியில் நாட்டின் இலக்கை அடைவதில் சந்தேகத்திற்கு இடமின்றி குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்யும்.

உலகளவில், இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் மிகப்பெரிய உற்பத்தி துறையாக மாறத் தயாராக உள்ளது. குறிப்பாக திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் நாட்டின் மிகப்பெரிய மின்னணு உற்பத்தி தொகுப்பாக மாறும் ஆற்றலை கொண்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read Entire Article