ARTICLE AD BOX

ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் “லீச்” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஆனது சென்னையில் நடைபெற்றது. முழுக்க முழுக்க புதிய மலையாள திரைக்கவிஞர்கள். தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு உருவாகியிருக்கும் இந்த படத்தை எஸ்.எம் ராஜன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பேரரசு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களை கேட்போம் ரசிப்போம். கேட்கிறபோதும், ரசிக்கும் போதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த மேடையில் அவர் பாடல்களை நிஜாம் பாடிய போது பதற்றமாக இருந்தது.
ஏனென்றால் அந்த அளவுக்கு காப்பி ரைட் விஷயம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். அந்த பாடலை பாடும்போது ஒரு ஆத்ம திருப்தி மகிழ்ச்சி கிடைக்கும். கேரளாவில் இருந்து வருபவர்கள் அந்த மலையாளம் கலந்த தமிழில் பேசியே புரிய வைத்து விடுவார்கள். ஆனால் நாம் தமிழ் கலந்த மலையாளம் பேசி அவர்களிடம் புரிய வைக்க முடியாது. இன்னொரு மொழி தெரிந்தது பிழை இல்லை. இன்று இவ்வளவு பேர் மத்தியில் அவர்கள் மலையாளத்தில் பேசிய புரிய வைத்தார்கள் அல்லவா? அப்படி நம்மால் முடியாது. குறிப்பாக என்னால் முடியாது. தமிழ் சினிமாவுக்கு மொழி பிரச்சனை இல்லை. நாம் அனைவரையும் அரவணைப்போம் என்று கூறியுள்ளார்.