ARTICLE AD BOX
இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான "செருப்புகள் ஜாக்கிரதை" சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, அதிகாரப்பூர்வமான வெளியீட்டுத் தேதியுடன் வெளியிட்டுள்ளது. SS Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் வகையில், முற்றிலும் நகைச்சுவையை மையமாக வைத்து, ரசிகர்கள் வயிறு குலுங்கி சிரித்து மகிழும் வகையிலான, அசத்தலான காமெடி சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
மேலும் படிக்க | டிராகன் படத்தில் பிரதீப்பிற்கு சம்பளம் எவ்வளவு? அடேங்கப்பா..இவ்வளவா?
வைரங்களை கடத்தி விற்கும் வியாபாரி ரத்தினம், தனது பொக்கிஷமான வைரத்தை அவனது செருப்பு ஒன்றில் மறைத்து வைக்கிறார். ரெய்டு அதிகாரிகளுக்கு பயந்து, அந்த செருப்பை ஆடிட்டரான தியாகராஜனிடம் ( சிங்கம்புலி ) கொடுக்கிறார். தியாகராஜனும் அவரது மகன் இளங்கோவும் செருப்பை தொலைத்து விடுகிறார்கள். வைரம் உள்ள செருப்பைத் தேடி அலையும், கலகலப்பான பயணம் தான் இந்த சீரிஸ். ஒவ்வொரு எபிஸோடும் கலக்கலான காமெடியுடன், பரபர திருப்பங்களுடன் வெகு சுவாராஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ளது.
Get ready for a hilarious game of Hide & Seek! #SeruppugalJaakirathai – A ZEE5 Original is coming your way to entertain you!
Premieres from March 28th!#SingamPuli @Vivek_Rajgopal #IraaAgarwal #Manohar @SRajeshdirector#SeruppugalJaakirathai #AZee5Original #ZEE5… pic.twitter.com/lpUgZQg5F6
— ZEE5 Tamil (@ZEE5Tamil) March 13, 2025
இந்த சீரிஸில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சிங்கம்புலி நடித்திருக்கிறார். இவருடன் விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர், இந்திரஜித், மாப்ள கணேஷ், உசேன், சபிதா, உடுமலை ரவி, பழனி, சாவல் ராம், director பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தொழில் நுட்ப குழுவில், ஒளிப்பதிவு - கங்காதரன், இசை - LV முத்து கணேஷ், எழுத்து - எழிச்சூர் அரவிந்தன், Editor - வில்சி J சசி, ஆடியோகிராஃபி - டோனி J, கலை - S சதீஷ்குமார், சவுண்ட் டிசைன் - ஹரி ஹரன், உடை வடிவமைப்பு - M அஷோக் குமார் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
உங்கள் முகங்களில் புன்னகை பூக்கச் செய்யும் இந்த “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸை, வரும் மார்ச் 28 முதல் ZEE5 தளத்தில் கண்டுகளிக்கலாம். ZEE5 மனோரஞ்சன் விழா மூலம், 2025 ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் 30 வரை, ZEE5, ஹோலி பண்டிகையைக் கொண்டாடும் வகையில், பல வெற்றிப் படங்கள், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சீரிஸ்கள், காமெடி டிராமாக்கள் மற்றும் அதிரடி ஆக்சன் படங்களை இலவசமாக வழங்கிவருவது குறிப்பிடதக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ