ARTICLE AD BOX
டிராகன் படத்தின் வெற்றிக்கு நடிகை கயாது லோஹர் நெகிழ்ச்சியுடன் தமிழில் பேசி விடியோ வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டிராகன் 3 நாளில் ரூ.50.22 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. இந்தப் படத்தில் 3 நாயகிகள் நடித்துள்ளார்கள். அதில் பல்லவி கதாபாத்திரத்தில் நடித்த கயாது லோஹர் 3 நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் பேசிய நடிகை
இன்ஸ்டாவில் விடியோ வெளியிட்டு கயாது லோஹர் தமிழில் பேசியதாவது:
எனக்கு எப்படி தொடங்குவது எனத் தெரியவில்லை. எனக்கும் டிராகனுக்கும் பல்லவி கதாபாத்திரத்துக்கும் கிடைக்கும் வரவேற்பு மிகையான ஒன்று. திரையரங்கில் எனக்கு நீங்கள் அடிக்கும் விசிலாகட்டும், இன்ஸ்டாவில் அழகான கமெண்ட்ஸ், எடிட் ஆகட்டும் இதெயெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
நான் தமிழ்ப்பொண்ணு இல்லை. தமிழும் சரியாக பேசவராது. ஆனால், நீங்கள் எனக்கு தரும் அன்பு விலைமதிக்காதது. இந்த அன்பை எனது படங்களின் மூலம் திருப்பி தருவேன். உங்களைப் பெருமைப்பட வைப்பேன் என்றார்.