ARTICLE AD BOX
தமிழகத்தில் 2024-25ம் ஆண்டிற்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில் 2024-25ம் ஆண்டிற்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிகல்வித்துறை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி முடிகிறது. இதையடுத்து பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வரும் மே 19ம் தேதி வெளியிடப்படுகிறது. அதற்கு முன்னதாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி 28ம் தேதி முடிவடைகிறது.
அதேபோல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து பொதுத்தேர்வுக்கான முடிவுகள் 10ம் வகுப்பு வெளியிடப்படும் அதே நாளில் அதாவது மே 19ம் தேதி வெளியிடப்படுகிறது. அதற்கு முன்னதாக 11ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ம் தேதி முடிவடைகிறது.
குறிப்பாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து பொதுத்தேர்வுக்கான முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்படுகிறது. அதற்கு முன்னதாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி முடிவடைகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 10,11, 12ம் வகுப்புகளுக்கு விரைவில் பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் தேர்வுப் பணிகளை கவனிக்க 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறையின் மூத்த இயக்குநர்கள் உள்ளிட்ட 35 அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதாவது செங்கல்பட்டு மாவட்டம்-பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், காஞ்சிபுரம்-மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உமா, சென்னை மாவட்டம்-தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி, திருவள்ளூர் மாவட்டம்-தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல பிற மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.