தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி மாநாடு.. எங்களின் சக்தி அப்போ தெரியும்.. விஜய் அறிவிப்பு!

1 day ago
ARTICLE AD BOX

தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி மாநாடு.. எங்களின் சக்தி அப்போ தெரியும்.. விஜய் அறிவிப்பு!

Chennai
oi-Yogeshwaran Moorthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பாக விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அப்போது தவெகவின் சக்தி அனைவருக்கும் தெரியும் என்று கூறிய விஜய், தமிழ்நாட்டில் முக்கியமான அரசியல் சக்தியாக தவெக வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்கா விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 3 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றார்.

TVK Vijay Tamilaga Vetri Kazhagam

இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், அரசியல் என்றாலே வேற லெவந்தான். தமிழக அரசியலில் நாம் ஒரு முக்கிய சக்தியாக வளர்ந்து வருகிறோம். திடீரென அரசியலுக்கு வருவதால், ஒரு சிலருக்கு எரிச்சல் வரத்தானே செய்யும். அவர்கள் தம்முடைய பொய்கள் உடைந்து போகும் என்று அஞ்சுகிறார்கள். மக்களுக்கு பிடித்தவர்கள் அரசியலுக்கு வந்தால், மக்கள் வரவேற்பார்கள்.

தவெக எளிய மக்களுக்கானது. பண்ணையார்களுக்கான கட்சி அல்ல. எளிய குடும்பங்களில் பிறந்தவர்கள் அரசியலுக்கு வரக் கூடாதா? பண்ணையாளர்களை தமிழ்நாட்டில் இருந்து அகற்றுவது தான் எங்கள் கட்சியின் முதன்மை நோக்கம். தமிழ்நாட்டில் விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்த உள்ளோம். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் சக்தி அப்போது தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
English summary
Tamilaga Vetri Kazhagam Booth Committee Conference will happen Soon says TVK Leader Vijay
Read Entire Article