ARTICLE AD BOX
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா பிப். 26! சிறப்பு விருந்தினராக பிரஷாந்த் கிஷோர் பங்கேற்பு?
செய்தி முன்னோட்டம்
மாமல்லபுரத்தில் வரும் புதன்கிழமை, பிப்ரவரி 26 அன்று தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெறவுள்ளது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை ஒருங்கிணைக்க 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் 2,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரஷாந்த் கிஷோர் பங்கேற்பு என தகவல்
இதற்காக பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்திற்கு மாவட்ட செயலர்களை அழைத்து, கட்சி சார்பில் அனுமதி சீட்டுகள் நேற்று வழங்கப்பட்டன.
அடையாள அட்டை
கியூ.ஆர். குறியீடுடன் கூடிய அடையாள அட்டை
துவக்க ஆண்டு விழாவில் பங்கேற்கும் கட்சியினருக்கு, கியூ.ஆர். குறியீடுடன் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இந்த அடையாள அட்டைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன, கூடுதல் கூட்டம் வராமல் தடுப்பதற்காகவே இந்த QR code அடையாள அட்டை திட்டம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த விழா மாமல்லபுரத்தில் உள்ள பாயின்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெறும்.
விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் அனைவருக்கும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு விழா நிறைவுற்றதும் ஓரிரு மாதங்களில் விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர்.