ARTICLE AD BOX

தமிழக முதல்வரின் தொகுதி மறுவரையறை கூட்டத்தை ஆந்திரா, மேற்குவங்கம் புறக்கணிப்பு; காரணம் என்ன?
செய்தி முன்னோட்டம்
2026 க்குப் பிறகு வரவிருக்கும் தொகுதி நிர்ணய செயல்முறையின் தாக்கம் குறித்து விவாதிக்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டினார்.
இது தமிழகம் உட்பட பல மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் குறைக்கக்கூடும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும், ஆந்திரா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்தன.
இந்தக் கூட்டத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் அழைக்கப்பட்டனர். மொத்தம் 29 அரசியல் கட்சிகள் பங்கேற்றன.
அரசியல் தலைவர்கள் பங்கேற்பு
கூட்டத்தில் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு
கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் முக்கியப் பங்கேற்பாளர்களாக இருந்தனர்.
ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டத்தில் உரையாற்றினார்.
அழைப்புகள் இருந்தபோதிலும், ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசக் கட்சி, அதன் கூட்டணிக் கட்சியான ஜனசேனா மற்றும் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.
தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனாவின் பாஜக கூட்டணி அவர்கள் பங்கேற்காதற்கான காரணமாக இருந்தாலும், ஜெகன் மோகன் ரெட்டி புறக்கணிப்பு முடிவு எதிர்பாராத ஒன்றாக உள்ளது.
மம்தா பானர்ஜி
மேற்குவங்கத்தின் மம்தா பானர்ஜி
இருப்பினும், ஆந்திராவின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் எந்தக் குறைப்பையும் எதிர்த்து அவர் முன்னதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதேபோல், இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடனான அவரது தொடர்ச்சியான அரசியல் போட்டியும், தொகுதி மறுவரையறை செயல்முறையால் மாநிலம் பாதிக்கப்படாது என்ற கூற்றுகளும் காரணமாக அவர் வராததற்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளை திமுக ஒன்று சேர்க்க நினைத்தாலும், இந்தியா கூட்டணிக்குள் உள்ள பிளவுகளை இது எடுத்துக் காட்டுகிறது.