தமிழக பட்ஜெட்.. தங்கம் போல.. இந்த ஒரு அறிவிப்பு வந்தால் மட்டும் போதும்.. மனசே குளிர்ந்திடும்!

2 days ago
ARTICLE AD BOX

தமிழக பட்ஜெட்.. தங்கம் போல.. இந்த ஒரு அறிவிப்பு வந்தால் மட்டும் போதும்.. மனசே குளிர்ந்திடும்!

Chennai
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் கல்வி கடனை தள்ளுபடி செய்வது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை காலை 9.30-க்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

old pension scheme pension

தமிழகத்தில் நீண்ட நாட்களாக மக்களின் கோரிக்கையாக கல்விக் கடன் தள்ளுபடி இருந்து வந்தது. பல்வேறு கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஆளும் திமுகவும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் மாணவர்கள் பலரும் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று கடந்த சில வாரங்களாக தீவிரமாக கோரிக்கை வைத்து வந்தனர்.

முக்கியமாக ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் தங்கள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை தற்போது தமிழ்நாடு அரசு ஏற்று ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் / மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48,95,00,000/-ஐ (ரூபாய் நாற்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று ஐந்து லட்சம் மட்டும்) சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி (Write off proposal) செய்து அரசு ஆணையிடுகிறது, என்று அறிவித்துள்ளனர்.

அறிவிப்பு வருமா?

தமிழகத்தில் நீண்ட நாட்களாக மக்களின் கோரிக்கையாக கல்விக் கடன் தள்ளுபடி இருந்து வந்தது. பல்வேறு கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஆளும் திமுகவும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் மாணவர்கள் பலரும் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று கடந்த சில வாரங்களாக தீவிரமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி தமிழ்நாடு பட்ஜெட்டில் கல்வி கடனை தள்ளுபடி செய்வது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பட்ஜெட் எப்போது

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை காலை 9.30-க்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் முன்னாள் மாணவர்கள் இடையே கல்விக்கடன் தள்ளுபடி மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் பட்ஜெட்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
English summary
Will Tamil Nadu government remove the Education Loan dues in the Budget 2025?
Read Entire Article