ARTICLE AD BOX
புதுடெல்லி,
மக்களவைக்கு பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசை விமர்சித்து வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்களை அணிந்து வந்திருந்தனர். சபாநாயகர் ஓம் பிர்லா அந்த எம்.பி.க்களை கண்டித்தார். அவையை ஒழுங்காக நடத்த விரும்பினால் சரியான ஆடையில் வருமாறு கேட்டுக் கொண்டார். நியாயமான எல்லை நிர்ணயம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என்ற வாசகம் அச்சிடப்பட்ட வெள்ளை நிற டி-சர்ட்களை அணிந்து மக்களவைக்கு தி.மு.க.,எம்.பி.க்கள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், 10 திமுக எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வது குறித்து நாளை (மார்ச் 21) காலை முடிவு எடுக்கப்படும் மாநிலங்களவை செயலகம் தகவல் தெரிவித்துள்ளது. 10 திமுக எம்.பி.க்கள் விதிகளை மீறி உடையணிந்து அவை மரபுகளை மீறியதாக அவைக் குறிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 10 எம்.பி.க்கள் யார் யார் என்பது குறித்து நாளை வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.