தமிழக அரசு வழங்கும் ரூ. 2000 உதவித்தொகை! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

2 hours ago
ARTICLE AD BOX

தமிழகத்தின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக தனது பட்ஜெட் உரையை வாசித்தார் அமைச்சர். இதில் பல்வேறு மக்கள் திட்டங்கள் வெளியிடப்பட்டு இருந்தது. மாணவர்களுக்கான திட்டங்கள், பெண்களுக்கான திட்டங்கள், அரசு ஊழியர்களுக்கான திட்டங்கள், புதிய மேம்பாலங்கள் என பல திட்டங்கள் மக்களை கவரும் விதமாக அமைந்து இருந்தது. இதில் சில திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக பயன் பெரும் வகையிலும் இடம் பெற்று இருந்தது. குறிப்பாக தாயுமானவர் திட்டம் மூலம் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் இந்த பட்ஜெட்டில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இவர்கள் விண்ணப்பித்தாலும் கிடைக்காது? யார் விண்ணப்பிக்கலாம்?

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியான இந்த முயற்சி பலரிடம் இருந்து பாராட்டை பெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் எடுத்த கணக்கெடுப்பின்படி, சுமார் 50,000 குழந்தைகள் தாய் மற்றும் தந்தை என இருவரையும் இழந்து உறவினர் வீட்டில் வளர்ந்து வருகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதம் ரூ. 2000 வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த நிதியுதவியை 18 வயதை அடையும் வரை குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். இந்த உதவித்தொகை குழந்தைகளுக்கு  அவர்களின் வாழ்க்கையில் சவாலான காலகட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு செலவு, கல்வி மற்றும் பிற செலவுகளுக்கு உதவும்.

வறுமையின் சுழற்சியை உடைப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவி கல்வி என்பதை அரசாங்கம் அங்கீகரித்து, இந்த குழந்தைகளுக்கு பள்ளி படிப்பு முடிந்தவுடன், கல்லூரி மற்றும் இதர தொழிற்படிப்புகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்றும் இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மட்டுமின்றி, தாயுமானவர் திட்டத்தின் கீழ் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி ஆதரவற்றோர், முதியோர், மனநலம் குன்றியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீது கவனம் செலுத்துவதன் மூலம், ஒவ்வொரு குடிமகனும் ஒரு நிறைவான வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்பைக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2025: எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? - முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article