ARTICLE AD BOX

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன் பெறும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் பயனடைய மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் இதன் மூலமாக ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தமிழக அரசு பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சத்தியவாணி முத்து அம்மையார் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் மிஷின் ஒவ்வொரு வருடமும் வழங்குகிறது.
அதாவது இந்த திட்டத்தின் கீழ் விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோருக்கு இலவச தையல் மிஷின் வழங்கப்படுகின்றது. மேலும் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். அதனைப் போலவே விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற தையல் பயிற்சி நிலையத்தில் குறைந்தது ஆறு மாத காலம் தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழையும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும் கல்விச்சான்று, ஜாதி சான்று, புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களுடன் அருகில் உள்ள அரசு இ சேவை மையம் மூலமாக இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.