ARTICLE AD BOX
Published : 15 Mar 2025 08:10 AM
Last Updated : 15 Mar 2025 08:10 AM
தமிழக அரசின் பட்ஜெட்டுக்கு தொழில் துறையினர் வரவேற்பு

சென்னை: தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு தொழில் துறையினர் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
சென்னை தொழில், வர்த்தக சபை தலைவர் ராம்குமார் சங்கர்: தமிழக அரசின் பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் சர்வதேச நகரம், ரூ.3,500 கோடியில் குறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டம், ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் முதலீடுகளை ஈர்ப்பதுடன், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். பொருளாதார வளர்ச்சி, சமூகநலத் திட்டங்களில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது.
இந்திய தொழில் வர்த்தக சபை (சிஐஐ) தென்மண்டலத் தலைவர் டாக்டர் நந்தினி: தமிழக அரசின் பட்ஜெட், பொருளாதாரம், சமூகநலத் திட்டங்கள், உட்கட்டமைப்பு, நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது. ரூ.350 கோடி முதலீட்டில் சென்னை குடிநீர் திட்டம், ரூ.3,500 கோடியில் வீடுகள் கட்டும் திட்டம், பெண்கள் பெயரில் செய்யும் பத்திரப் பதிவுக்கு முத்திரைத் தாள் கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைப்பு ஆகியவை பெரிதும் வரவேற்கத்தக்கவை.
தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத் (டான்ஸ்டியா) தலைவர் சி.கே.மோகன்: தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டுக் கழகம் மூலம் 9 இடங்களில் புதிய தொழில்பேட்டைகள், அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம், திருமங்கலம், ஒத்தக்கடை இடையே மெட்ரோ ரயில் திட்டம், ஒரகடம்-செய்யாறு தொழில்வழித் தடத்துக்கு நிதி ஒதுக்கீடு, தூத்துக்குடியில் சிந்தெடிக் ஃபைபர் மற்றும் தொழில்நுட்ப பூங்கா நிறுவுதல் உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில், தொழில் நிறுவனங்களுக்கான சூரிய மின்சக்திக்கான மானியம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் காலக் கடனுக்கு (டேர்ம் லோன்) வட்டி மானியம் அறிவிக்கப்படவில்லை.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- தமிழக பட்ஜெட்டில் பொதுமக்களின் நலன்கள் முற்றிலுமாக புறக்கணிப்பு: எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு
- திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை ரூ.2,100 கோடி மதிப்பில் 4.2 கி.மீ. நீளத்துக்கு 4 வழித்தட உயர்மட்ட சாலை | தமிழக பட்ஜெட் 2025
- அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட்: கூட்டணி கட்சித் தலைவர்கள் பாராட்டு
- தமிழக அரசுக்கு மொத்தம் ரூ.45,152 கோடி இழப்பு: பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்