ARTICLE AD BOX

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை. இதில் வரும் விவாதம் வீண். இப்ப, விஷயத்திற்கு வருவோம்..
அசுரன், அமரன், லக்கி பாஸ்கர் உள்பட 100 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். மேலும், அஜித் நடித்திருக்கும் ‘குட் பேட் அக்லி, விக்ரம் நடித்திருக்கும் ‘வீர தீர சூரன்’ அன்பறிவ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் படத்துக்கும் இசையமைக்கிறார்.
இசையமைப்பில் பிஸியானாலும் நடிப்பதையும் விடவில்லை. அவ்வகையில் அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் வித்தியாசமான ஜானரில் உருவாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படம், விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் கூறியதாவது:
‘நான் சிறு வயதாக இருந்தபோதே சினிமாவில் பாட ஆரம்பித்து விட்டேன். அதற்கு பிறகு இசையமைப்பாளராகி ஒரு இடத்தை பிடிப்பதற்கு நிறைய கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன்.
படங்களில் நடித்தும் வருகிறேன். தனுஷ் ஒரு சிறந்த நடிகர். அவர் அளவுக்கெல்லாம் என்னால் நடிக்க முடியாது’ என்றார்.
இதற்கு நெட்டிசன்ஸ், ‘நடிகராக வந்த தனுஷ் பன்முகத் திறமையாளராக தன்னை வளர்த்துக் கொண்டார். நாளை இசையமைப்பாளராகவும் ஆகலாம். ஆனால், ஜி.வி.பிரகாஷ் லெவலுக்கு வருமோ?’ என்ற விளக்கவுரை வைரலாகி வருகிறது.

The post தனுஷ் போல ஜி.வி.பிரகாஷ்; ஜி.வி.பிரகாஷ் போல தனுஷ்: முடியுமா? appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.