ARTICLE AD BOX
Kubera Movie Official Release Date : தொலைநோக்கு பார்வை கொண்ட திரைப்படைப்பாளர் சேகர் கம்முலா இயக்கத்தில் வரும் ஜூன் 20,2025 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் 'குபேரா' படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் ஆகியோரை உள்ளடக்கிய மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் முன்பு எப்பொழுதும் நடித்த கதாபாத்திரங்களைப் போலல்லாமல் புதுவிதமாக நடித்துள்ளதுடன், குபேரா இந்திய சினிமாவில் முத்திரை பதிக்கும் திரைப்படமாக இருக்கும் என்பது உறுதியாகிறது. தனது ஆழமான, குணச்சித்திர கதாபாத்திரங்கள் மூலம் நகரும் கதைகளுக்கு பெயர் பெற்ற சேகர் கம்முலா புதிய படைப்பு பிராந்தியத்திற்குள் நுழைந்து, இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக குபேரா படம் இருக்கிறது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுனில் நாரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் மேற்பார்வையில் குபேரா அதிகபட்ச பொருட்செலவில் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும்போது, அது ஒரு உண்மையான பான்-இந்தியா நிகழ்வாக இருக்கும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குபேரா படம் குறித்த இன்னும் பல அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரிசையாக படங்களில் கமிட்டான தனுஷ்!!
தனுஷ், நடிக்கும் படங்கள் ஒரு லிஸ்டாக போக, அவர் எழுதி-இயக்கி, நடிக்கும் படங்களின் லிஸ்டும் நீண்டுகொண்டே போகிறது. சமீபத்தில் அவர் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடிகோபம் திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் அடுத்து இட்லி கடை படம் வெளியாகப்போகிறது. தொடர்ந்து சில இயக்குநர்களுடன் கைக்கோர்த்திருக்கும் இவர் இன்னும் 2 வருடங்களுக்கு தொடர்ந்து பிசியாக இருக்கும் அளவிற்கு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.
மேலும் படிக்க | எதிர்பார்க்காத இயக்குநருடன் கைக்கோர்க்கும் தனுஷ்! படம் கண்டிப்பா ஹிட்தான்..
மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ்ஜின் அடுத்த பட ஹீரோ! ‘இந்த’ 41 வயது நடிகர்தான்..யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ