தனுஷ் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி.. சி.இ.ஓ அளித்த விளக்கம்..!

4 days ago
ARTICLE AD BOX

நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி நடந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் சிஇஓ தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர் என பல்வேறு அவதாரங்களில் இருப்பவர் தனுஷ். தற்போது, அவர் ஒருபக்கம் படங்களை இயக்கிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் வுண்டர்பார் பிலிம்ஸ் என்பதும், அதன் சார்பில் தயாரிக்கப்பட்ட ’நீதானே என் பொன்வசந்தம்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், "வுண்டர்பார் நிறுவனத்தின் அடுத்த படத்தில் புதுமுக நடிகர்கள் தேவை" என்று போலியாக விளம்பரம் செய்து, அதன் மூலம் பண மோசடி செய்யப்படுவதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் கசிந்தன.

இதனை அடுத்து, வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரேயாஸ் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். தனது அறிக்கையில்,

"எனது பெயரில் அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரில் எந்த நடிகர், நடிகைகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு வெளிவரும் விளம்பரங்கள் போலியானவை மற்றும் ஆதாரமற்றவை என்பதை கவனத்திற்கு கொண்டு வருவதற்கு இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து, தனுஷின் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் புதுமுகங்கள் தேவை என்ற போலியான விளம்பரங்களை நம்பி, யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

From the Desk of CEO of @wunderbarfilms pic.twitter.com/Ui4TPkkuHm

— Wunderbar Films (@wunderbarfilms) February 19, 2025
Read Entire Article