ARTICLE AD BOX
அஜித் துபாயில் இருக்கிறார். ஆகஸ்ட் மாதம் தான் மீண்டும் சென்னை திரும்புகிறார். இந்நிலையில் தனுஷ் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார் என்று சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வருகிறது. அதற்குள் எப்படி அடுத்த படம் என இருவரது கூட்டணி குறித்தும் ஒரு பெரிய பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.
இதை உறுதி செய்யும் விதமாக பல விஷயங்கள் நடந்துள்ளது. ஏற்கனவே தனுஷ், அஜித்தை ஜனவரி மாதம் சந்தித்துள்ளார். அப்பொழுது அஜித்துக்காக ஒரு ஒன் லைஃப் ஸ்டோரியையும் சொல்லி உள்ளார். இதில் மிகவும் இம்ப்ரஸ் ஆன அஜித் இதை முழு ஸ்கிரிப்ட்டாகவும் ரெடி பண்ண சொல்லியுள்ளார்.
வருகிற ஏப்ரல் மாதத்தில் அஜித் ஒரு வாரம் சென்னை வந்து விட்டு செல்கிறார். அப்பொழுது தனுஷ் உடன் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடும் நடந்துள்ளது. இதன்பிறகு தான் இவர்கள் கூட்டணி என்ன என்பதை பற்றி முழுமையான செய்திகள் வெளிவரும். ஏற்கனவே அஜித்துக்காக சிறுத்தை சிவா மற்றும் விஷ்ணுவர்தன் இருவரும் ரெடியாக இருக்கிறார்கள்.
இதற்கிடையில் குட் பேட் அக்லி டீசர் வெளிவந்து ஹிட் அடித்ததில் அஜித் செம குஷியில் இருக்கிறார். இதை அஜித் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள். டீசரை பார்த்தே படம் சூப்பர் ஹிட் என்றெல்லாம் ஆரவாரம் செய்து வருகின்றனர். இந்த படம் ஹிட்டடித்தால், ஆதிக்கிற்கு அடுத்த படம் உறுதி.
சிறுத்தை சிவா மற்றும் விஷ்ணுவர்தன் இருவரும் அஜித்தின் கால் சீட்டுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே அவர் படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் இப்பொழுது தனுஷ் மற்றும் ஆதிக் இருவரும் தான் அடுத்த லிஸ்டில் இருப்பதாக தெரிகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் படம் பண்ணுவாரா என்பது கேள்விக்குறிதான்.