ARTICLE AD BOX
தனுஷ் நடித்த ‘குபேரா’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி புதிய போஸ்டருடன் வெளியாகியுள்ளது. அந்த மாஸ் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய ‘குபேரா’ திரைப்படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இந்த படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தனுஷ் தனது சமூக வலைதளத்தில் அறிவித்து, அதை உறுதிப்படுத்தும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்த ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
ஏற்கனவே தனுஷ் நடித்து இயக்கிய ’இட்லி கடை’ திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் மாதத்தில் ‘குபேரா’ படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்தடுத்த சில மாதங்களில் தனுஷின் இரண்டு படங்கள் வெளியாக இருப்பது, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.