தனியார் மயமாக்கலை கண்டித்து திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம்…!

3 days ago
ARTICLE AD BOX

ரயில்வே தனியார் மயமாவதை கண்டித்தும், ஆட்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும், லட்சக்கணக்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 8-வது சி.பி.சி அறிக்கைக்காக காத்திராமல் 50 சதவீத டி.ஏ.வை உடனடியாக அடிப்படை சம்பளத்துடன் இணைத்து வழங்க வேண்டும். என்.பி. எஸ், யூ.பி.எஸ்.ஐ ரத்து செய்ய வேண்டும். மீண்டும் ஓ.பி.எஸ். வழங்கிட வேண்டும்.01-01-2023 முதல் அனைத்து கேட்டகிரிகளுக்கும் சி.ஆர்.சி பதவி உயர்வு வழங்கிட வேண்டும் . ஐ.ஆர்.டி பதிவு செய்தவருக்கு இடமாற்ற உத்தரவு வழங்கிட வேண்டும், 4 பன்ச் பயோமெட்ரிக் என்ற பெயரால் ஒர்க் ஷாப் தொழிலாளர்களை துன்புறுத்தக் கூடாது, பயோமெட்ரிக்கை அனைத்து தொழிலாளர்களுக்கும் கொண்டுவரும் முடிவை கைவிட வேண்டும், அனைத்து கேட்டகிரிகளுக்கும் 8 மணி நேர வேலையை உறுதி செய்திட வேண்டும், லோகோ பைலட், கார்டுகளின் வேலை நேரத்தை குறைத்து வாரம் ஒரு முறை முழுநாள் ஓய்வினை கட்டாயம் ஆக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் திருச்சி பொன்மலையில் இன்று(21-02-2025) துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான பணியாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

The post தனியார் மயமாக்கலை கண்டித்து திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம்…! appeared first on Rockfort Times.

Read Entire Article