தனி ஒருவன் 2 திரைப்படம் என்ன ஆச்சு.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

23 hours ago
ARTICLE AD BOX

தனி ஒருவன்

2015ம் ஆண்டு இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான தனி ஒருவன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. அனைவரையும் இப்படம் திரும்பி பார்க்க வைத்தது.

ரவி மோகன், நயன்தாரா, அரவிந்த் சாமி, தம்பி ராமையா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தனர். இப்படத்தின் மாபெரும் எதிரியை தொடர்ந்து தனி ஒருவன் 2 திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அதன்படி, 8 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2023ல் தனி ஒருவன் 2 திரைப்படத்தின் அப்டேட்-ஐ ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஆனால், அதன்பின் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவே இல்லை. என்ன காரணம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்கள்.

தனி ஒருவன் 2

இந்த நிலையில், படத்தின் பட்ஜெட் தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் இப்படத்தை சற்று தள்ளிவைத்துள்ளார்களாம். மேலும் ரவி மோகன் அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே போல் மோகன் ராஜாவும் தெலுங்கில் இரண்டு படங்களை கமிட் செய்துள்ளார்.

இதனால் தனி ஒருவன் 2 படத்திற்கான நேரம் வரும்போதும் பண்ணலாம் என முடிவு எடுத்துள்ளதாகவும், உடனடியாக படப்பிடிப்பு துவங்க வாய்ப்பு இல்லை என்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். 

Read Entire Article