தனது 7 வயது பேரனை ரூ.200 – க்கு விற்ற மூதாட்டி… காரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸ்…!!

6 hours ago
ARTICLE AD BOX

ஒடிசாவில் உள்ள கிராமத்தில் மந்த் சோரன்(7) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போன நிலையில், தாயும் கொரோனாவால் இறந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். ஆனால் பாட்டியின் வயது மூப்பு காரணமாக அவரால் பேரனை கவனிக்க முடியவில்லை. இந்நிலையில் பாட்டி தனது சகோதரி வீட்டிற்கு பேரனுடன் குடி பெயர்ந்துள்ளார். அங்கு இவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் பாட்டி மற்றும் பேரனையை, அவர்கள் பராமரிக்க மிகவும் சிரமப்பட்டனர்.

இதனால் பாட்டி தனது பேரன்புடன் வீட்டை விட்டு வெளியேறி அருகிலுள்ள பஸ் ஸ்டாண்டில் வசித்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து வறுமையில் வாடிய அவர் தனது பேரனை கவனித்துக் கொள்ள முடியாததால் ரூ.200க்கு விற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் தனது பேரனை நிதி ஆதாயத்திற்காக விற்கவில்லை என்பதும், தன்னால் அவரை கவனித்துக் கொள்ள முடியவில்லை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் 7 வயது சிறுவனை மீட்டு குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Read Entire Article