தண்டவாளத்தில் தலை வைத்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை: தேனி அருகே பரபரப்பு

1 day ago
ARTICLE AD BOX


தேனி: தேனி நகரில் இருந்து மதுரை செல்லும் சாலையில் குன்னூர் கிராமம் உள்ளது. இங்குள்ள வைகை ஆறு ரயில்வே பாலம் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் உடல் சிதைந்த நிலையில் கிடப்பதாக தேனி ரயில்வே எஸ்ஐ இர்வினுக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஆண், பெண் உடல்கள் ரயிலில் மோதி பல பாகங்களாக சிதறி கிடந்தன.

போடி – சென்னை விரைவு ரயில் நேற்றுமுன்தினம் இரவு 8.50 மணியளவில் தேனி ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரயில் குன்னூர் வைகையாற்று பாலம் அருகே இரவு 9 மணியளவில் சென்றபோது, இருவர் மீதும் மோதி இறந்தது தெரியவந்துள்ளது. இரவு நேரம் என்பதால் யாருக்கும் தெரியவில்லை. நேற்று காலை விவசாய பணிகளுக்கு சென்றோர் பார்த்து தெரிவித்தப் பிறகே ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரியவந்தது.

இவர்களது உடல்கள் கிடந்த பகுதியில் ஒரு பைக் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இறந்து போனவர் திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த மணிகண்டன் (35) என தெரியவந்தது. மணிகண்டனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவருக்கு பொள்ளாச்சியை சேர்ந்த சம்யுக்தா என்ற பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டது. இதனால் இருவரது குடும்பத்திலும் பிரச்னை வெடித்தது.

இதன்காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன் மணிகண்டனும், சம்யுக்தாவும் விட்டை விட்டு வெளியேறி பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுள்ளனர். பின்னர், குன்னூர் வைகையாற்று பாலம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தண்டவாளத்தில் தலை வைத்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை: தேனி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article