தடை நீக்கும் திருத்தலங்கள்

4 hours ago
ARTICLE AD BOX

மனநோய் நீங்க

மனம் சார்பான எல்லா பிரச்சனைகளும் தீர்த்து வைக்கும் அற்புத திருத்தலமான திருமுருகன் பூண்டிக்கு சென்று கிருத்திகையுடன் கூடிய பௌர்ணமியில் உரிய நேரத்தில் இங்குள்ள தீர்த்தங்களில் நீராடினால் உடல் நோயும் மன நோயும் நீங்கும்.

வீடு கட்ட

வீடு கட்டும் போது ஏற்படுகின்ற பிரச்சனைகள் நீங்க சிறுவாபுரி முருகனை வழிபட்டால் நீங்கும். ஒவ்வொரு மாதமும் வாஸ்து பூஜை செய்யும் நேரத்தில் சிறுவாபுரி முருகனிடம் நமது ஆசையை பிரார்த்தித்து, திருப்புகழ் பாடி, தேன் தினை மாவு பழங்களுடன் பிரார்த்தித்தால் வீடு கட்டும் யோகம் கிடைக்கும்.

திருமணத்தடை நீங்க

முருகன் செவ்வாய் அம்சமாக கருதப்படுவதால் செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்ட திருமணமாகாத ஆண்களுக்கு அரிசிற்கரை புத்தூர் முருகன் தம் ஆற்றலால் திருமணத்தை நடத்தி வைக்கிறார். இங்குள்ள முருகன் முன்னால் அமர்ந்து கந்தர் அலங்காரம் ஜெபித்து வந்தால் நினைத்தது நிறைவேறும்.

குடும்ப பிரச்சினை நீங்க

தென்காசி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் வந்து அனுமனுக்கு வெண்ணை காப்பு சாத்தி, வடை மாலை துளசி மாலை வெற்றிலை மாலை சேர்த்து போட்டு, 52 முறை அடிப்பிரதட்சணம் செய்து, பால் பாயாசம் தானமிட்டு வணங்கி போற்றிட பிரச்னைகள் குறைந்து பிரிந்தவர்கள் கூடுவார்கள்.

பதவி பெற

பதவி தொடர்பான எல்லா வேண்டுதல்களையும் திருசேய்நல்லூர் ஸ்ரீ சத்யகிரி நாதர் ஏற்று நடத்தி தருகின்றார். ஞாயிற்றுக்கிழமை நெய் தீபமேற்றி, பெரிய புராணத்தில் உள்ள விசார தம்மர் வரலாற்றை மனமுவந்து படித்து நம் வேண்டுதல்களை வைத்தால் இறைவன் நிறைவேற்றி தருவார்.

தீயவை அகல

திருபுவனம் சென்று ஸ்ரீ சரப ஹோமம் செய்து, ஸ்ரீ சரப மூர்த்திக்கு சூரியன் செவ்வாய் சனி ஓரைகளில் அபிஷேகம் செய்து, வடை மாலை சாத்தி வழிபட, தீயவை அகம் பகையின் கடுமை குறையும். பெண்களுக்கான பிரச்சினைகளுக்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் அபிஷேகம் ராகு காலத்தில் அர்ச்சனை தரிசன தியானமும் செய்வது நற்பலனை தரும்.

கடன் தொல்லை நீங்க

ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் கால பைரவருக்கு முந்திரிப் பருப்பு மாலை கட்டி புனுகு சாத்தி வேண்டுதல் அல்லது வெண்பொங்கல் பிரசாதமிட்டு, 'காலபைரவர் போற்றி' என்று 108 சொல்லி மனப்பூர்வமாய் வழிபட்டு பிரார்த்தித்தால் நலம் கிடைக்கும்.

தெளிவு பெற

பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்புபவர்கள் திருவலஞ்சுழி சென்று ஓரண்ட முனிவருக்கு சாம்பிராணி தைல காப்பிட்டு, காரியம் வெற்றி கொடுக்க பணிந்து வணங்கிட வேண்டும். பின்னர் வலஞ்சுழி விநாயகருக்கு பச்சை கற்பூரம் சாத்தி வழிபட்டு உள்ளிருக்கும் அம்மையப்பரை வணங்க வேண்டும். இதனால் பிரச்சனைகள் நீங்கி மனம் தெளிவு பெறலாம்.

சரிந்த வாழ்வை சரி செய்ய

கும்பகோணத்திற்கு வடகிழக்கு பதினாறாவது கிலோமீட்டரில் ஸ்ரீ தாலவரனேஸ்வரர் ஆலயம் உள்ளது. ஒரு பக்தரின் நிலைக்கு இரக்கப்பட்டு சிவபெருமானே முடிசாய்ந்து மாலையை ஏற்ற பதியாகும். சாய்ந்த லிங்கமானது பிற்பாடு குங்குலியக் கலிய நாயனாரால் நிமிர்த்தப்பட்டது. இத்தல வழிபாடு சரிந்த வாழ்வை நிமிரச் செய்யும்.

இதையும் படியுங்கள்:
ஆன்மிக திருத்தலங்கள் அதிசயத் தகவல்கள்!
Muruga, Hanuman, Meenakshi

வாழ்வில் எல்லா செல்வங்களும் தேடி வர

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் மங்கையர்கரசி நாயனார், குலச்சிறைநாயனார் வாழ்ந்திட தலம். திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் மந்திரியாய் இருந்து சிவப்பணி செய்த திருத்தலம். திருஞானசம்பந்தர் விந்தை பல நிகழ்த்தி சமணரை ஜெயித்து, சைவம் தழைக்க செய்த தலம். இங்கு வழிபட்டால் வாழ்வில் எல்லா செல்வங்களும் தேடி வரும்.

கடவுள் வேலி அமைத்து காக்கும் தலம்

திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் ஆலயம் அமுதுக்கான நெல் மழையால் நனையாதவாறு சிவபெருமானே வேலியிட்டு காத்த திருத்தலமாகும். இறைவன் மத பாகுபாடில்லாதவர். அன்புடையோருக்கும் நம்பிக்கையுடையவருக்கும் தொண்டன் என்பதை நிரூபிக்கும் வகையில் அன்வர் கான் என்ற இஸ்லாமியரின் வயிற்று வலியை தீர்த்தபதியாகும். மூன்று கை கால் தலை உடைய ஜூரஹரதேவர் உள்ள தலமாகும். இங்கு வழிபடுபவரை கடவுள் வேலி அமைத்து காக்கிறார்.

(ஆதாரம்: தடை நீக்கும் திருத்தலங்கள் என்ற நூலில் இருந்து)

இதையும் படியுங்கள்:
விதவிதமான கோலத்தில் நந்தி பகவான் அமைந்த திருத்தலங்கள்!
Muruga, Hanuman, Meenakshi
Read Entire Article