ARTICLE AD BOX
சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.64,080க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.64,400க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் தங்கம் விலை மேலும் குறைந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.8,010க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.64,080க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 குறைந்துள்ளது.
The post தங்கம் விலையில் மாற்றம் பவுனுக்கு ரூ.320 குறைந்தது appeared first on Dinakaran.