ARTICLE AD BOX
இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் தங்கம் விலை கிராம் ரூ.8,500 வரையிலும், சவரன் ரூ.75 ஆயிரம் வரை உயர வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :- என்னை பொருத்தவரை தங்கம் விலை இன்னும் உயரும். தங்கம் விலை கிராமுக்கு என்று பார்த்தால் ரூ.8,500 வரை செல்லும், ரூ.9,000 வரை செல்லவும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தங்கம் விலை ரூ.75 ஆயிரம் வரை செல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இது உடனடியாக நடைபெறாது. அடுத்த 12 முதல் 18 மாதத்திற்குள் உயரும். ஆனால் ரூ.75 ஆயிரம் என்பது நிச்சயமாக உயரும். அடுத்த 3 வருடங்களில் தங்கம் விலை கிராம் ரூ.10 ஆயிரத்தை தொட்டுவிடும். அதற்கு மத்திய நிதி அமைச்சரும், இந்த பாஜக ஆட்சியும் அதற்காக வேலை செய்து கொண்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.58ஆக இருந்தது. கடந்த 10 ஆண்டு காலத்தில் இது ரூ.87 ஆக உயர்ந்துள்ளது. அன்று தங்கம் ஒரு அவுன்ஸ் 1,200 அமெரிக்க டாலராக. இன்று அதே தங்கம் 2,720 டாலர்தான். அங்கு தங்கம் விலை இரண்டு மடஙகு தான் உயர்ந்தது. ஆனால் இங்கு மூன்று மடங்கு உயர்ந்ததற்கு காரணம் ரூபாயின் மதிப்பு சரிவு ஆகும். மேலும், தங்கம் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதால் கடத்தல் அதிகரித்து. கடந்த பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தார். தற்போது மீண்டும் அதனை அதிகரிக்க உள்ளார். அதனால் உடனடியாக தங்கத்தின் விலை ரூ.500 உயர்ந்துவிடும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டிருக்கிறது. அதனை எப்படியாவது தடுத்து நிறுத்த மத்திய அரசு முயற்சிக்கின்றனர்.
மோடி குஜராத் முதலமைச்சர் ஆக இருந்தபோது, 62 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு ரூ.58ஆக மன்மோகன் சிங் கொண்டு சென்றார். அப்போது, மோடி, டாலர் மதிப்பு மன்மோகன் சிங்கின் வயதை தாண்டி விடுமா என கூறினார். ஆனால் இன்று மோடியின் 75 வயதை தாண்டி, அவரது குருநாதர் அத்வானியின் வயதை கடந்து டெண்டுல்கரை போல ரூபாய் முலம் செஞ்சுரி அடித்து விடுவார். தற்போது ரூபாயின் மதிப்பு 86.69 உள்ளது. ரேட் கட் செய்தால் மார்ச் மாததிற்குள் ரூ.87 வந்து விடும். இந்த வருட இறுதிக்குள் ரூ.90 ஆக வந்துவிடும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் இதேபோல் இருந்தால் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92 முதல் ரூ.95-ஐ தொட்டு விடும். ரூ.95 தொட்டுவிட்டால் உடனடியாக 100க்கு சென்றுவிடும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர உயர தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கும். ஏனென்றால் தங்கம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனால் தங்கம் விலை உயர்ந்து கொண்டேதான் இருக்கும்.
2013ஆம் ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 63ஆக அதிகரித்தது. அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பானுடன் 50 பில்லியன் டாலர் கரன்சி ஸ்வாப் ஒப்பந்தம் போட்டார். அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராகும் ராஜனை, ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமித்தார். அவர் வெளிநாட்டு இந்தியர்களிடம் இருந்து வாங்கும் டெபாசிட்டிற்கான வட்டியில் மாற்றம் செய்தார். இதன் மூலம் ரூபாயின் மதிப்பை 63ல் இருந்து 56க்கு உயர்த்தினார். இதற்கு முன்பு 2006ல் ரூ.48க்கு வந்ததை திரும்ப ரூ.42க்கு கொண்டு சென்றுள்ளார். அதுபோல் முடிந்தால் மோடி செய்ய வேண்டும். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை முடிவுகள் தான் இன்று தங்கம் விலை உயர்வுக்கு காரணம். கடந்த 2005 -06 கால கட்டத்தில் பொறியியல் படித்து வெளியே வருபவர்களுக்கு முதல் நிலையில் ரூ.30 ஆயிரம் சம்பளம் வாங்கினார்கள். இன்று பொறியியல் படித்தவர்களுக்கு வேலை கிடைப்பதே கடினம். அப்படி கிடைத்தாலும் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் தான் சம்பளம் கிடைக்கிறது. அன்று தங்கம் விலை கிராம் ரூ.1000க்கும் குறைவு. இன்று கிராம் ரூ.8,000 ஆயிரம். தங்கம் விலை 10 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் சம்பளம் அதே நிலையில்தான் உள்ளது.
பாஜக அரசு பொருளாதாரத்தில் தோல்வி அடைந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சி என்பது எப்போதும் ஏழைகளுக்காக வேலை செய்யும் அரசு. நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்காக காங்கிரஸ் அரசு செயல்பட்டது. பெட்ரோலிய பொருட்களான கச்சா எண்ணெய் விலை 148 டாலர் ஆக உயர்ந்தபோது கூட பிரதமர் மன்மோகன் சிங் ரூ.70க்கும், ரூ.65க்கும் பெட்ரோல் வழங்கினார். ரூ.400-க்கு கேஸ் சிலிண்டர் வழங்கினார். இன்று கச்சா எண்ணெய் பீப்பாய் 60 டாலருக்கு விற்பனையாகிறது. ஆனால் பெட்ரோல் விலை 3 வருஷமாக ரூ.102. இதில் 50 ரூபாய் வரி ஆகும். கார்பரேட்டுகளுக்கு 40 சதவீத வரி விதித்து, மக்களுக்கு பணம் கொடுத்தவர் மன்மோகன் சிங். இன்று கார்ப்ரேட் வரியை 25 சதவீதம் ஆக்கி, மக்களிடம் வரி வேட்டை நடத்துவது பாஜக அரசு. கார்ப்பரேட் வரி விதித்து, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், கல்விக்கடன் போன்றவற்றை மன்மோகன் செய்தார். இன்று ஒரு சாதாரண மாணவர் கல்விக்கடன் வாங்க கூட முடியாது. 100 நாள் வேலை ஆண்டுக்கணக்கில் நிதி வழங்கப்படாமல் உள்ளது. அன்று கச்சா எண்ணெய் 148 டாலராக இருந்தபோதுத, பெட்ரோல் விலை ரூ.60ஆகவும், கேஸ் சிலிண்டர் விலை ரூ.400 ஆகவும் இருந்தது. ஆனால் இன்று கச்சா எண்ணெய் விலை 60 டாலர் ஆக இருக்கும்போது சிலிண்டர் விலை ரூ.1000 ஆக உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.