தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்னும் சில நாட்களில் ரூ.65000 வரை உயருமா?

2 days ago
ARTICLE AD BOX

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்னும் சில நாட்களில் ரூ.65000 வரை உயருமா?

Gold
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

மேலும், இன்னும் சில நாட்களில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.65,000 என்ற விலையில் விற்பனை ஆகும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூபாய்   8,055 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 உயர்ந்து  ரூபாய்  64,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,787 எனவும் ஒரு சவரன் ரூபாய் 70,296 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 108.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  108,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது


Edited by Siva
Read Entire Article