தங்கம் விலை புதிய உச்சம்! இன்றைய நிலவரம்!

2 hours ago
ARTICLE AD BOX

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(பிப். 25) சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில், சனிக்கிழமை சவரனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.64,360-க்கு விற்பனையான நிலையில், திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.10 உயா்ந்து ரூ.8,055-க்கும், சவரனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.64,440-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று(செவ்வாய்க்கிழமை) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, ரூ. 64,600-க்கும் கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 8,075-க்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: 2026 மே மாதம் வரை பொறுத்திருங்கள்: ஓபிஎஸ்

தங்கத்தின் விலை கடந்த வியாழக்கிழமை ரூ.64,560-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்ட நிலையில், இன்று மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

வெள்ளி விலை தொடா்ந்து 2-ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.108-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,08,000-க்கும் விற்பனையாகிறது.

Read Entire Article