தங்கம் விலை சற்று உயர்வு! இன்றைய நிலவரம்!

4 hours ago
ARTICLE AD BOX

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து, ரூ. 64,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிக்க : கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி!

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று காலை சவரனுக்கு ரூ. 80 மீண்டும் உயர்ந்து ரூ. 64,400-க்கும் ஒரு கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 8,050-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, நீண்ட நாள்களாக வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ. 108-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ. 2 குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 106 ஆகவும், ஒரு சவரன் ரூ. 1,06,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article