தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10,000 வரை போகலாம்.. ஆனந்த் சீனிவாசன் ஷாக்! இனி குறைய வாய்ப்பே இல்லை போல

1 day ago
ARTICLE AD BOX

தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10,000 வரை போகலாம்.. ஆனந்த் சீனிவாசன் ஷாக்! இனி குறைய வாய்ப்பே இல்லை போல

Business
oi-Vigneshkumar
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் தங்கம் விலை நிற்காமல் உயர்ந்து வரும் நிலையில், நடுத்தர வர்க்கத்தினர் நிஜமாகவே என்ன செய்வதென்று புரியாமல் விழித்து வருகிறார்கள். ஆனால், தங்கம் விலை இனியும் கூட குறைய வாய்ப்பே இல்லை என்கிறார் ஆனந்த் சீனிவாசன். வரும் நாட்களில் தங்கம் விலை எந்தளவுக்கு உயர வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து அவர் விளக்கியுள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்தியாவில் தங்கம் விலை கடந்த பல நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இடையில் ஓரிரு நாட்கள் குறைந்தாலும் கூட ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது தங்கம் விலை கணிசமாக அதிகரித்தே வருகிறது.

anand srinivasan business personal finance

தங்கம் விலை:

22 கேரட் தங்கத்தைப் பொறுத்தவரை ஒரு கிராம் கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.215 அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களில் தங்கம் விலை ஒரே ஒரு நாள் மட்டுமே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,555க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் ரூ.60,440ஆக உள்ளது.

தங்கம் விலை இந்தளவுக்கு உயர்ந்துள்ளது நடுத்தர வர்க்கத்தினரிடையே கவலையை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஆனால், ஆனந்த் சீனிவாசன் இத்துடன் தங்கம் விலை ஏற்றம் நிற்கப் போவதில்லை என்கிறார். வரும் காலங்களில் தங்கம் விலை நிச்சயம் உயரவே செய்யும் எனக் குறிப்பிட்ட அவர், தங்கம் விலை எந்தளவுக்கு உயரும் என்பது குறித்தும் அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்துள்ளார்.

நம் எல்லோருக்கும் உள்ள கேள்வி.. பங்குச்சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம்? ஆனந்த் சீனிவாசன் பதில்
நம் எல்லோருக்கும் உள்ள கேள்வி.. பங்குச்சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம்? ஆனந்த் சீனிவாசன் பதில்

ஆனந்த் சீனிவாசன்:

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை கிங்-ஆக ஏறி வருகிறது. வரலாறு காணாத அளவுக்குத் தங்கம் விலை உயர்ந்துள்ளது. 8 கிராம் தங்கம் ஏற்கனவே ரூ.60 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. தங்கத்துடன் ஜிஎஸ்டியை சேர்த்தால் ஒரு கிராம் தங்கமே ரூ.7800கிட்ட போய்விடும். அதேநேரம் டைட்டன் உள்ளிட்ட சில நகைகளில் ஏற்கனவே தங்கம் விலை ரூ.8000ஐ தாண்டிவிட்டது.

24 கேரட் தங்கம் இப்போது ரூ.8200ஐ தாண்டிவிட்டது. அத்துடன் ஜிஎஸ்டியை சேர்த்தால் கிட்டதட்ட ரூ.8450 ஆக இருக்கும். இன்னும் ரூ.50 அதிகரித்தால்... ஜிஎஸ்டியை சேர்த்து ரூ.8450 என்ற நமது இலக்கில் முதல் டார்கெட்டை தங்கம் அடைந்துவிடும். அதாவது 24 கேரட் தங்கம் விலை இன்னும் ரூ.600 ரூபாய் அதிகரித்தால்.. 22 கேரட் தங்கமும் பின்னாலேயே ரூ.8000ஐ கடந்துவிடும். 24 கேரட் தங்கம் விலை ரூ.9000 தொட்டுவிட்டால் 22 கேரட் தங்கம் ரூ.8500ஐ தாண்டிவிடும். இது நான் ஜிஎஸ்டியை சேர்த்தே சொல்கிறேன். தங்கம் அதிகரிப்பதையே இது காட்டுகிறது.

தங்கம் விலை உயர்கிறது:

இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் கூட தங்கம் விலை அதிகரித்தே வருகிறது. 11 வாரங்களில் இல்லாத அளவுக்குத் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இறக்குமதி வரி தொடர்பாக அவர் சொன்ன தகவல்களால் தங்கம் விலை சற்று குறைந்தது. ஆனால், இப்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2750 டாலரை தொட்டுவிட்டது. (ஒரு அவுன்ஸ் என்பது 28.34 கிராம் ஆகும்).

ரூ. 5 கோடி சேர்ப்பது கூட ரொம்ப ஈஸி.. 2கே கிட்ஸுக்கு ஆனந்த் சீனிவாசன் கொடுத்த டிப்ஸ்
ரூ. 5 கோடி சேர்ப்பது கூட ரொம்ப ஈஸி.. 2கே கிட்ஸுக்கு ஆனந்த் சீனிவாசன் கொடுத்த டிப்ஸ்

ரூ.10 ஆயிரம் வரை போகும்:

தங்கம் விலை அடுத்து என்னவாகும் என்பது குறித்து நாம் சில ஆப்ஷன்களை பார்க்கலாம். நாம் எதிர்பார்த்தபடியே எல்லாம் நடந்தது என்றால் ஒரு அவுன்ஸ் தங்கம் 3500 டாலர் வரை போகும். அதாவது இங்கிருந்து 30% வரை டாலர் மதிப்பில் தங்கம் உயர வாய்ப்பிருக்கிறது. 30% வரை உயர்ந்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் கூட 95 வரை போக வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் ஒரு கிராம் தங்கம் விலை இந்தியாவில் ரூ. 10 ஆயிரம் வரை வர வாய்ப்பு இருக்கிறது. அடுத்த 18 மாதங்களில் இதற்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறது.

இது ஒரு ஆப்ஷன் தான். நிச்சயம் நடக்கும் எனச் சொல்லவில்லை. ஆனால், நாம் கண்டிப்பாகவே சொல்லலாம் 22 கேரட் தங்கம் விலை ரூ.8500க்கு சீக்கிரம் போய்விடும்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

More From
Prev
Next
English summary
Renowned expert Anand Srinivasan predicts a significant surge in gold prices, expecting rates to rise by ₹10,000 per gram (தங்கம் விலை வரும் காலத்தில் எந்தளவுக்கு உயரும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கம்): Gold price will not reduce in near furture says Anand Srinivasan.
Read Entire Article