ARTICLE AD BOX
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 அதிரடியாக வெள்ளிக்கிழமை குறைந்துள்ளது.
கடந்த சில நாள்களாக தங்கம் விலை அதிரடி ஏற்றத்தைக் கண்டு வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டு ஒரு சவரன் தங்கம் ரூ. 64,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, அடுத்தடுத்து இரு நாள்களில் ரூ. 520 குறைந்து வியாழக்கிழமை காலை ஒரு சவரன் ரூ. 64,080-க்கு விற்பனையானது.
இதையும் படிக்க : காவல் நிலையத்தில் இன்று ஆஜராகிறார் சீமான்!
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அதிரடியாக ரூ. 400 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 63,680-க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 7,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாள்களுக்கு பிறகு தங்கத்தின் விலை மீண்டும் ரூ. 64,000-க்கு கீழ் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல், வெள்ளியும் இரண்டு நாள்களுக்கு பிறகு கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ. 105-க்கு விற்பனை செய்யப்படுகிறது.