ARTICLE AD BOX
தங்கம் வாங்கபோறீங்களா? பத்து பத்து ரூபாயா சைலண்டா விலை ஏறுது.! இன்னைக்கு ரேட் செக் பண்ணுங்க.!!
தங்கம் விலை ஆனது வாரத்தின் முதல் நாள் மார்ச் 10ஆம் தேதி சற்று விலை ஏற்றம் கண்டுள்ளது. சமீபகாலமாக தங்கம் வாங்குவோருக்கு ஒருவித குழப்பத்தை அளித்து வரும் தங்கத்தால், அதை வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விலை மாறாமல் அப்படியே இருந்த தங்கம் விலை இன்று விலை ஏற்றம் கண்டுள்ளது. இது நகை வாங்குவோர்களிடையே பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இன்றைய நிலவரப்படி தங்கம் விலை ரூ. 8,050-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,781-க்கும் விற்பனையாகிறது.
நேற்றைய (09/03/2025) தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களை பொறுத்தவரையில், சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை மாறாமல் அதன் முந்தைய நாள் விலையான ரூ.8,040 என்ற விலையில் விற்பனையானது. அதன் 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.64,320-க்கு விற்பனையானது. 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.80,040-க்கும் விற்பனையானது.

அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8771-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 70,168-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.87,710-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,630-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.53,040-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.66,300-க்கும் விற்பனையானது.
இன்றைய (10/03/2025) தங்கம் விலை நிலவரம்: இன்றைய மார்ச் 10ஆம் தேதி நிலவரப்படி, முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து ரூ.8,050-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.80 அதிகரித்து ரூ.64,400-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.100 அதிகரித்து ரூ.80,500-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.10 அதிகரித்து ரூ.8,781-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.80 அதிகரித்து ரூ.70,248-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.100 அதிகரித்து ரூ.87,810-க்கும் விற்பனையாகிறது.1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.5 அதிகரித்து ரூ.6,635-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.40 அதிகரித்து ரூ.53,080-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.50 அதிகரித்து ரூ.66,350-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, 1 கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1,08,000-த்திற்கு விற்பனையாகிறது.