ARTICLE AD BOX
பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரன்யா ராவுக்கும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதன் ஒரு பகுதியாக, அவரது திருமண விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்கள், பெறப்பட்ட விலையுயர்ந்த பரிசுகள் மற்றும் திருமண காட்சிகள் மற்றும் விருந்தினர் பட்டியல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவருவாய் புலனாய்வு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் நடிகை ரன்யாராவுக்கு மாநிலத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள சில அரசியல் கட்சி தலைவர்கள், மாநில காவல்துறையில் பணியாற்றும் சில அதிகாரிகள் தொடர்பு மற்றும் ஆதரவு இருப்பதாக விசாரணையில் தெரியவந்த நிலையில் தற்போது, புகழ் பெற்ற மடாதிபதி ஒருவரின் பின்புலம் இருப்பதும் தெரியவந்துள்ளது.
பெங்களூரு ஆர்.டி.நகரில் வசித்து வரும் மடாதிபதியுடன் நடிகை ரன்யாராவுக்கு மிகவும் நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும், அந்த மடாதிபதி துபாய் நாட்டில் அலுவலகம் திறந்துள்ளதாகவும், அந்த அலுவலகத்தின் மூலம் கிரிப்டோ கரன்சி வினியோகம் செய்து வருவதாகவும், இதில் ரன்யாராவின் பங்களிப்பு இருப்பதையும் டிஆர்ஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நடிகை ரன்யாராவ் அடிக்கடி துபாய் சென்றபோது, அங்கிருந்து மடாதிபதி, அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இருப்பதும்யும் டிஆர்ஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் இப்புகாரில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் தருணுக்கும் மடாதிபதியுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இப்புகாரில் விரைவில் மடாதிபதி கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.
* கடத்தப்பட்டது 24 கேரட் சுத்த தங்கம்
இதனிடையே கடந்த 4ம் தேதி ரன்யாராவிடம் இருந்து டிஆர்ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்த 14 கிலோ தங்க கட்டிகள் ஆபரண மதிப்பீட்டு கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை பரிசோதனை செய்த மதிப்பிட்டு மையம், பறிமுதல் செய்த தங்க கட்டிகள் 24 கேரட் சுத்த தங்கம் என்பதை உறுதி செய்து சான்றிதழ் வழங்கியுள்ளதாக டிஆர்ஐ வட்டாரம் மூலம் தெரியவருகிறது.
The post தங்கம் கடத்தல் வழக்கில் ரன்யா ராவுடன் தொடர்பில் இருந்த மடாதிபதி கைதாகிறார் appeared first on Dinakaran.