தங்க பாத்திரத்தில் சமையல்… அதிசயப்படுத்தும் சீனப்பெண்… வைரலாகும் வீடியோ…!!!

4 hours ago
ARTICLE AD BOX

தங்கம் என்றாலே பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். பலவிதமான தங்க நகைகளை அணிந்து பார்ப்பதில் ஆர்வத்துடன் இருப்பர். இதேபோன்று சீனாவில் தங்கத்தால் ஆன பாத்திரத்தில் பெண் ஒருவர் சமையல் செய்து சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில் ஷென்சென் என்ற இளம் பெண் சொந்தமாக 2 நகைக்கடைகள் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் தனது நண்பரின் தங்கப்பட்டறையில் ஒரு கிலோ தங்கத்தில் தங்கத்தால் ஆன பாத்திரத்தை செய்து வாங்கியுள்ளார்.

அதில் தனக்கு பிடித்தமான உணவை சமைத்து சாப்பிட்டுள்ளார். தங்கப் பாத்திரம் விற்பனைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே பாத்திரத்திற்கு உரிமையாளரான வாடிக்கையாளரிடம் அனுமதி பெற்று தான் சமைத்து சாப்பிட்டு பார்த்தேன் என வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தங்க பாத்திரத்தால் சமைப்பதால் உணவின் சுவையில் எந்த ஒரு மாறுபாடும் ஏற்படவில்லை எனவும். தங்கம் ஒரு சிறந்த கடத்துத்திறன் கொண்டது எனவும் தெரிவித்துள்ளார். இந்த தங்க பாத்திரத்தின் விலை இந்திய மதிப்பின்படி ரூபாய் 84 லட்சம் இருக்கும் என கூறியுள்ளார். இந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

In Shenzhen, China, a woman used a 1-kilogram pure gold pot, valued at nearly $100,000, to prepare #hotpot . pic.twitter.com/tRtJNNKlE8

— Discover GuangZhou (@Discover_GZ) February 20, 2025

Read Entire Article