தக்காளிக்கு சட்னிக்கு இந்த பொருளை மட்டும் சேர்த்து பாருங்க சுவை ஆஹா தான்

1 day ago
ARTICLE AD BOX

காலை உணவு பொதுவாக இட்லி தோசை தான் செய்வார்கள். இதனுடன் சேர்த்து சாப்பிட எப்போதுமே மிகவும் இலகுவாகவுதம் சுவையாகவும் செய்வது சட்னி தான்.

இது தேங்காய் வைத்து செய்வார்கள். பின் தக்காளி சட்னியை எல்லோரும் ஒரேபோல அரைத்து செய்வார்கள். ஆனால் இந்த பதிவின் மூலம் தக்காளி சட்னியை வித்தியாசமாக அரைத்து காட்டப்போகிறோம்.

தக்காளி சட்னி அரைக்கும் போது அதனுடன் இரு குறிப்பிட்ட பொருளை சேர்த்து அரைத்தால் அதன் சுவை வித்தியாசமாகவும், தனித்துவமானதாகவும் இருக்கும். எனவே இந்த பதிவில் தக்காளி சட்னி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

 தேவையானப் பொருட்கள்

  • நன்கு பழுத்த தக்காளி - 4
  • பச்சை மிளகாய் - 5
  • எள் - 1 ஸ்பூன்
  • பூண்டு - 4 பல்
  • மல்லி விதை - 1 ஸ்பூன்
  • எண்ணெய் - 2 ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • கடுகு - அரை ஸ்பூன்
  • கறிவேப்பிலை ஒரு கொத்து
  • உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
  • சீரகம் - கால் ஸ்பூன்
  • பெருங்காயம் 1 சிட்டிகை

செய்யும் முறை

செய்முறை: ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கொத்தமல்லி விதை, சீரகம், இறுதியாக எள் சேர்த்து, அவை வெடிக்கும் வரை வறுக்கவும்.

இதை ஆறவைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.

பின்னர் தக்காளியை நறுக்கி அதில் போட்டு வதக்கவும். தக்காளி முழுவதுமாக வதங்கி மென்மையான பேஸ்டாக மாறும் வரை வதக்க வேண்டும். பின்னர் எள் பொடி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து மென்மையான சட்னியாக அரைக்கவும்.

சட்னியை தாளிக்க அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொரியும் வரை தாளிக்கவும்.

அதன்பின் உளுந்தம்பருப்பு மற்றும் சீரகம் மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றவும். இந்த சட்னி மூன்று நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


Read Entire Article