தகப்பா.. இதெல்லாம் நியாயமா…? மகனின் காதலியை கரம் பிடித்த தந்தை…. அதிர்ச்சி சம்பவம்….!!

6 days ago
ARTICLE AD BOX

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிட்கோ பகுதியில் ஒரு வாலிபர் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். அந்த வாலிபர் ஒரு பெண்ணை காதலித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. மேலும் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் வாலிபரின் தந்தையும் தனது வருங்கால மருமகளை காதலித்துள்ளார். இதற்கு அந்த பெண் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.

இருவரும் கிராமத்தை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். தனக்கு மனைவியாக வர வேண்டிய பெண் சித்தியாக வந்ததால் அந்த வாலிபர் அதிர்ச்சியடைந்தார். அவரை உறவினர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் இனி யாரையும் திருமணம் செய்து கொள்ளவோ, யாருடனும் இருக்கவோ விருப்பமில்லை எனக் கூறி அவர் சாலை ஓரத்தில் தனியாக வசித்து வருகிறார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article