ARTICLE AD BOX
இஸ்லாமியர்களின் பண்டியான ரமலான் நோம்பு சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், ஒரு நாள் ரமலான் நோம்பு கடைபிடிப்பதாகவும், நாளை இப்தார் நோம்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெறறிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அப்போது தனது 30 ஆண்டுகால நடிப்பு வாழ்க்கையை விட்டு விலக உள்ளதாகவும், அறிவித்து பலருக்கும், அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தற்போது தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் தீவிரமாக நடித்து வரும் விஜய், இடையில் தனது கட்சியில் அரசியல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில், தனது கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், கட்சியில் உள்ள அணிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிரபல அரசியல் ஆலோசகரான பிரஷாந்த் கிஷோருடன் இணைந்து அடுத்து 2026-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் விஜய் அதிமுகவுடன் கூட்டணியில் தேர்தலை சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில், பிரஷாந்த் கிஷோர் விஜய் தனித்து போட்டியிடுவார் என்று கூறியுள்ளார்.
ஒரு பக்கம் தனது கடைசி படம், மற்றொரு பக்கம், 2026 தேர்தலை சந்திக்க தயாராகி வருவது என பிஸியாக இருந்து வரும் நடிகர் விஜய், ஒரு நாள் ரமலான் நோம்பு கடைபிடிக்க உள்ளார். சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஊஏ மைதானத்தில் நாளை தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நோம்பு திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இஸ்லாமிய பெருமக்களுடன் இணைந்து விஜய் இந்த நோம்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.