ARTICLE AD BOX
Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி எட்டாவது சீசன் வின்னர் முத்துகுமரன் தன்னுடைய சமீபத்திய பேட்டியால் தொடர்ச்சியாக தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தது பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி. ஒரே வீட்டில் 16 பேரும் 60 கேமராக்கள் முன்னால் 100 நாட்கள் இருக்க வேண்டும். இதன் முதல் சீசன் பெரிய ஹிட் கொடுக்க தமிழில் தொடர்ச்சியாக சீசன்கள் உருவாக்கப்பட்டது.
முதல் சீசனில் பெரிய வைரலான ஓவியா வெளியேற ஆரவ் டைட்டிலை தட்டினார். தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்திகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும் வெற்றி பெற்றனர். நான்காவது சீசன் வெற்றியாளரான ஆரி தான் பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.
அடுத்த சீசனில் ராஜூவும், ஆறாவது சீசனை அசீமும் தட்டினர். இதில் முதல் மூன்று சீசன்களை போல இல்லாமல் அடுத்த மூன்று சீசன் வெற்றியாளர்கள் தான் நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க கண்டெண்ட் கொடுத்து ஆதிக்கம் செலுத்தி டைட்டிலையும் தட்டினர்.
இதில் மூவரும் வெவ்வேறு ரகம் என்பதும் உண்மை. அசீம் உள்ளே இருந்த யாரிடமும் ஓவர் நட்பு பாராட்டாமல் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்தார். அதை தொடர்ந்து மக்கள் ஆதரவு இருக்க போய் தான் வெற்றியும் பெற்றார். இது முடிந்த கதை.
தற்போதையை சீசன் வின்னர் முத்துகுமரன் தன்னுடைய பேட்டி ஒன்றில், ஆறாவது சீசன் வெற்றியாளர் நெகட்டிவாக தான் தன்னை காட்டி கொண்டார். வெற்றி பெற்றார். ஆனால் தற்போது அவர் எங்கு இருக்கிறார். மக்கள் அவரை எவ்வாறு கொண்டாடுகிறார்கள். 106 நாட்கள் இருப்பது மட்டும் வெற்றி என்பது இல்லை.
வளரும் கலைஞருக்கான ஒரு மேடை. அதனால் தான் எல்லாரும் பிக்பாஸ் வாய்ப்புக்காக ஏங்குகிறார்கள் எனவும் பேசி இருக்கிறார். தற்போது இந்த பேச்சு வைரலாகி வரும் நிலையில் முத்துகுமரன் விமர்சிக்கப்பட்டு வருகிறார். அசீம் நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் கன்டெண்ட் கொடுத்தார்.
ஆனால் நீங்கள் கூட்டணி சேர்ந்து குழி பறித்தீர்கள். இப்போ பேசுற நீங்க இன்னும் ஒரு வருஷம் கழிச்சு எங்க இருக்கீங்கனு பார்க்குறோம் எனவும் வரிசையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். எதுவா இருந்தாலும் டைட்டிலை வென்ற ஒருவரை விமர்சிப்பது எப்படி சரியாக இருக்கும்.
அவர் மட்டுமல்ல பிக்பாஸ் நிகழ்ச்சியின் எந்த வின்னருமே பெரிய அளவில் இதுவரை சாதிக்காத போது ஒருவரை மட்டும் கைக்காட்டுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும் எனவும் தொடர் கேள்விகள் எழுந்துள்ளது. தான் வென்ற நிகழ்ச்சியின் ஒரு சீசன் வின்னரை அசிங்கப்படுத்துவது தனக்கு அசிங்கம் என்பதை முத்துகுமரன் மறந்தார் என்றும் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.