டேஸ்டியான சிறுபருப்பு தோசை - முட்டைகோஸ் குழம்பு செய்யலாம் வாங்க!

5 hours ago
ARTICLE AD BOX

ன்றைக்கு சுவையான சிறுபருப்பு தோசை மற்றும் முட்டைகோஸ் குழம்பு ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

சிறுபருப்பு தோசை செய்ய தேவையான பொருட்கள்:

சிறுபருப்பு-1 கப்.

நெய்-தேவையான அளவு.

கல் உப்பு-தேவையான அளவு.

கருவேப்பிலை-1 கொத்து.

கொத்தமல்லி-சிறிதளவு.

இஞ்சி-1 துண்டு.

சீரகம்-1 தேக்கரண்டி.

காய்ந்த மிளகாய்-2

பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி.

சிறுபருப்பு தோசை செய்முறை விளக்கம்.

முதலில் 1 கப் சிறுபருப்பை நன்றாக தண்ணீரில் கழுவி விட்டு 1 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் 1 தேக்கரண்டி சீரகம், 2 காய்ந்த மிளகாய், கருவேப்பிலை 1 கொத்து, ½ தேக்கரண்டி பெருங்காயத்தூள், தேவையான அளவு கல் உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதை இப்போது ஒரு பவுலுக்கு மாற்றிவிட்டு அதில் துருவிய 1 துண்டு இஞ்சி, கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து கலந்துவிட்டு தோசைக்கல்லில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து பரப்பிவிட்டு அதில் மாவை ஊற்றி தோசை பொன்முறுவலாக வந்ததும் எடுத்து சுடசுட பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான சிறுபருப்பு தோசை தயார்.

முட்டைகோஸ் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

முட்டைகோஸ்-1/4 கப்.

புளி-எழுமிச்சை அளவு.

பூண்டு-10

தேவையான அளவு-உப்பு.

கத்தரிக்காய்-4

எண்ணெய்-1 குழிக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

மிளகாய் தூள்-2 தேக்கரண்டி.

முட்டைகோஸ் குழம்பு செய்முறை விளக்கம்.

முதலில் குக்கரில் ¼ கிலோ முட்டைகோஸை சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் எழுமிச்சை அளவு புளி, பூண்டு 10, தேவையான அளவு உப்பு, கத்தரிக்காய் 4, தண்ணீர் ½ கப் ஊற்றி மூன்று விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும். இதை இப்போது மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதில் 1 தேக்கரண்டி கடுகு, கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் 2 தேக்கரண்டி சேர்த்து எண்ணெய்யில் பிரட்டிவிட்டு இப்போது அரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி கிளறிவிட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிவந்து எண்ணெய் பிரிந்து வரும் சமயம் இறக்கிவிடவும். அவ்வளவுதான் சுவையான முட்டைகோஸ் குழம்பு தயார்.

இந்த சிம்பிள் ரெசிபிகளை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

இதையும் படியுங்கள்:
சுவையான திருவையாறு அசோகா அல்வா - ஹாட் டாக் ரெசிபிஸ் செய்யலாமா?
delicious lentil dosa-cabbage curry!
Read Entire Article