ARTICLE AD BOX
புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
Advertisment
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய தேசிய ராணுவ கல்லுாரியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நுழைவு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் 02.01.2013க்கு முன்னரும், 01.07.2014க்கு பின்னரும் பிறந்திருக்கக் கூடாது. மாணவர்கள் இக்கல்லுாரியில் சேரும் போது ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
புதுச்சேரி மாநில மாணவ, மாணவிகளுக்கு எழுத்துத் தேர்வு, வரும் ஜூன் 1ம் தேதி புதுச்சேரி, அண்ணா நகர், காமராஜர் நுாற்றாண்டு கல்வித் துறை வளாகத்தில் நடக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.