டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார்? இங்கிலாந்து தொடரில் இவர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு!

9 hours ago
ARTICLE AD BOX

India Tour Of England: இந்திய அணி கடைசியாக விளையாடிய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இழந்தது. சீனியர் வீரர்கள் இந்த தொடர் முழுவதும் சொதப்பியதால் சொந்த மண்ணில் மூன்று டெஸ்ட்களையும், ஆஸ்திரேலிய மண்ணில் தொடரையும் இழந்தது. மேலும் இந்திய அணி இடம் இருந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையும் ஆஸ்திரேலியாவிடம் சென்றது. அடுத்தபடியாக ஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. கடைசியாக 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது இந்திய அணி.

மேலும் படிக்க | விலகும் பாட் கம்மின்ஸ்? அப்போ ஹைதராபாத் கேப்டன் யார்? கடுப்பில் காவ்யா மாறன்!

இங்கிலாந்து தொடரில் மாற்றம்?

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் தொடர்களில் மோசமாக விளையாடியிருந்தாலும் ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றுள்ளது. தற்போது நான் ஓய்வு பெறப் போவதில்லை என்றும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர். இதனால் இங்கிலாந்து தொடரிலும் ரோகித் சர்மா கேப்டனாக தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் இடம் வரப்போவது யார் யார்?

டெஸ்டில் ரோகித் சர்மா கேப்டனாக தொடர்ந்தால் அவருடன் சேர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடுவார். சமீப ஆண்டுகளாக இருவரும் டெஸ்டில் நல்ல தொடக்கத்தை கொடுத்து வருகின்றனர். மூன்றாவது இடத்தில் சும்மான் கில்லும் நான்காவது இடத்தில் விராட் கோலியும் விளையாட உள்ளனர். ஆஸ்திரேலியா தொடரில் விராட் கோலி தொடர்ந்து ரன்கள் அடிக்க சிரமப்பட்டாலும், முதல் டெஸ்டில் மட்டும் சதம் அடித்து இருந்தார். மிடில் ஆர்டரில் தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், சர்ஃபராஸ் கான் ஆகியோர் இடம் பெற வாய்ப்புள்ளது.

சமீபத்திய ரஞ்சிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் கருண் நாயருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்க உள்ளது. ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இடம் பெறுவார்கள். விக்கெட் கீப்பர்கள் வரிசையில் ரிஷப் பந்த் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் நிச்சயம் இடம் பெறுவார்கள். கூடுதல் விக்கெட் கீப்பராக துருவ் ஜூரேல் அணியில் இடம் பெறலாம். வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, ஷமி, ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் ஆகியோரை இங்கிலாந்துக்கு கூட்டிச் செல்ல வாய்ப்புள்ளது. தற்போது பும்ரா காயத்தில் இருப்பதால் இங்கிலாந்து தொடருக்கு முன் குணமாகி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், சர்ஃபராஸ் கான், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், கே.எல். ராகுல், ரிஷப் பந்த், ஜஸ்பிரித் கிருஷ்ணா, மொமட் சி. பும்ரா சிராஜ், ஆகாஷ் தீப்.

மேலும் படிக்க | IPL 2025: 10 ஐபிஎல் அணிகளின் இம்பாக்ட் வீரர்கள் யார் யார்...? லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article