ARTICLE AD BOX
டெல்லியை ஆளப்போகும் ரேகா குப்தா-வின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியைத் தேர்தல் தோற்கடித்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த பாரதிய ஜனதா கட்சி பல நாட்களாகச் செய்து வந்த பேச்சுவார்த்தை புதன்கிழமை முடிந்து டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி-யின் எம்எல்ஏ-க்கள் மத்தியில் நடைபெற்ற வாக்கெடுப்பில், 48 எம்எல்ஏக்கள் 50 வயதான ஷாலிமார் பாக் பகுதியின் வேட்பாளரான புதிய முதல்வராக நியமிக்க வாக்களித்தனர். ஆனால் அவர் யார்?
டெல்லி தேர்தலுக்குப் பின்பு டெல்லி முதல்வராகப் பலரின் பெயர் அடிப்பட்டது ஆனால் கடைசியாக இப்போட்டியில் வென்றது ரேகா குப்தா தான். ஷாலிமார் பாக் தொகுதியில் குப்தா ஆம் ஆத்மி கட்சியின் வந்தனா குமாரியை 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இவருடைய சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?

பட்டதாரியான ரேகா குப்தாவின் மொத்த சொத்து மதிப்பு 5.31 கோடி ரூபாய், இதோடு இவருக்கு 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களும் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் இவரின் வருமானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, 2023-24ல் 6.92 லட்சம் ரூபாயும், 2022-23ல் 4.87 லட்சம் ரூபாயும், மற்றும் 2021-22ல் 6.51 லட்சம் ரூபாயும் வருமானமாகக் கொண்டிருந்தார். இதற்கு மாறாக, அவளது கணவர் மனிஷ் குப்தா 2023-24 ஆண்டில் 97.33 லட்சம் வருமானத்தைப் பெற்றுள்ளார்.
பாஜகவில், ரேகா குப்தா மகிளா மோர்ச்சாவின் தேசிய துணைத் தலைவராகப் பதவி வகிக்கிறார் மற்றும் பொது சேவையில் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டுள்ளார். ரேகா குப்தா முன் வகித்த முக்கிய பொறுப்புகளில் பாஜகவின் டெல்லி மாநில பிரிவின் பொதுச் செயலாளர் மற்றும் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
ரேகா குப்தாவின் அரசியல் வாழ்க்கை 1990-களின் தொடக்கத்து, டெல்லி பல்கலைக்கழகத்தில், தௌலத் ராம் கல்லூரியில் அவர் படித்துக்கொண்டு இருந்த போது, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) இல் இணைந்து மூலம் தொடங்கியது.
1996-97 ஆம் ஆண்டளவில், அவர் டெல்லி பல்கலைக்கழகம் மாணவர் சங்கத்தின் (DUSU) தலைவராக ஆனார், இதன் மூலம் அவரது தலைமையின் அரசியில் பயணத்தை வலிமையான துவங்கினார்.
2007 இல், அவர் உத்தரி பிடம்புரா (வார்டு 54) இல் இருந்து எம்சிடி கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்று முழு நேர அரசியலில் தனது பயணத்தைத் துவங்கினார். பின்னர் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வரையில் முன்னேறி இன்று டெல்லி முதல்வராகியுள்ளார்.