ARTICLE AD BOX
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டசபை தேர்தலில், 117 இடங்களில், 92 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, (AAP) பஞ்சாபில் ஆட்சிக்கு வந்தபோது, நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உறுதியளித்ததன் மூலம், மாநில அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் விடியலைக் குறித்தது என்று பலர் நம்பினர்.
Read In English: After Kejriwal debacle, why Bhagwant Mann govt is resorting to mass sacking of cops, officers
தற்போது பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்து, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பகவந்த் மான் தலைமையிலான அரசாங்கம், சமீபத்திய டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் படுதோல்வியைத் தொடர்ந்து, அதன் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை மீண்டும் தொடங்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஆம் ஆத்மி கட்சி, டெல்லி மற்றும் பஞ்சாப் இரண்டிலும் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்ததற்கு ஊழல் குற்றச்சாட்டுகள் தான் காரணமாக இருக்கிறது. மதுபானக் கொள்கை ஊழல் முதல் "ஷீஷ் மஹால்" சர்ச்சை வரை பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது, இதனிடையே ஆம் ஆத்மி கட்சித் தலைமை அதன் வேகத்தை மீண்டும் பெற ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல் தேவை என்பதற்கான தெளிவான பொது சமிக்ஞையைக் கண்டுள்ளது.
இதன் காரணமாக வரும் 2027-ம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு, ஆம் ஆத்மி கட்சி, 2022 தேர்தல் பிரச்சாரத்தின் போது கட்சியின் முக்கிய வாக்குறுதியான, மாநிலத்தில் ஊழலை ஒழிப்பதில் மீண்டும் கவனம் செலுத்தியுள்ளது. இது குறித்து நேற்று முன்தினம், பஞ்சாப் முதல்வர் பகவத் மான் அரசாங்கம் 236 சட்ட அதிகாரிகளிடம் இருந்து ராஜினாமா கோரியது.
குறிப்பாக அரசாங்கம் நீதிமன்றங்களில் பல வழக்குகளில் தோல்வியடைந்த பிறகு, அட்வகேட் ஜெனரல் அலுவலகத்தின் செயல்திறன் குறித்த "அதிருப்தியை" அதிகாரிகள் மேற்கோள் காட்டினர். இந்த சட்ட அதிகாரிகள் ராஜினாமா செய்தாலும், "முழு (ஏஜி) அலுவலகமும் மறுசீரமைக்கப்படும் வரை" அதிகாரிகள் தங்கள் பதவிகளில் தொடர்வார்கள் என்று அட்வகேட் ஜெனரல் குர்மிந்தர் சிங் கூறினார்.
கடந்த டிசம்பரில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள் பாரத் பூஷன் ஆஷு மற்றும் சுந்தர் ஷாம் அரோரா ஆகியோர் மீதான எஃப்ஐஆர்களை ரத்து செய்தது, இதன் மூலம் பொது வாழ்வில் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்ற அதன் நோக்கத்தில் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்தது. இந்த இரண்டு வழக்குகளையும் விஜிலென்ஸ் பீரோ விசாரணை நடத்தியது.
இதனிடையே கடந்த திங்கட்கிழமை, பகவத் மான் அரசாங்கம், 1993 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான வரீந்தர் குமாரை, ஊழல் குற்றச்சாட்டில், காவல்துறை தலைமை இயக்குநரிடம் (டிஜிபி) புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. அதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை, ஊழல் குற்றச்சாட்டில், கான்ஸ்டபிள்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை 50க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை அரசாங்கம் பணிநீக்கம் செய்தது. அடுத்து வெள்ளிக்கிழமை, மாநில காவல்துறையில் ஏற்பட்ட மறுசீரமைப்பின் போது, 9 மாவட்டங்களில் புதிய காவல்துறைத் தலைவர்களை அரசாங்கம் நியமித்தது.
இதற்கிடையில், சமீபத்திய மாதங்களில் 8 காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்பி) மற்றும் 10 துணை எஸ்பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே கடந்த திங்கட்கிழமை, ஸ்ரீ முக்த்சர் சாஹிப்பின் துணை ஆணையர் ராஜேஷ் திரிபாதி, 2016 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி, "கடுமையான ஊழல் புகார்களைத்" தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டார், மேலும் அவர் மீது விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
பஞ்சாப் காவல்துறையில் இதுபோன்ற பெருமளவிலான பணிநீக்கங்களுடன், ஊழலைக் கையாள்வதில் தனது உறுதிப்பாடு குறித்து ஆம் ஆத்மி அரசு வலுவான நடவடிக்கையை எடுக்க விரும்புகிறது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆம் ஆத்மி கட்சி மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் மீது ஊழல் கண்காணிப்பு பிரிவு வழக்குகளை பதிவு செய்தபோது, "பழிவாங்கும் அரசியல்" என்று குற்றம் சாட்டப்பட்டது. மேற்கண்ட நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், அரசாங்கம் தங்கள் நேர்மையாக இருப்பதை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
இருப்பினும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான (எல்ஓபி) காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா, ஆம் ஆத்மி அரசு ஊழல் வழக்குகளை "செர்ரி தேர்ந்தெடுப்பதாக" குற்றம் சாட்டியுள்ளார், அதே நேரத்தில் மூத்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் வேளையில் கீழ்நிலை அதிகாரிகளை குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த அணுகுமுறை ஊழல் குறித்த கட்சியின் கூறப்பட்ட "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" நிலைப்பாட்டைக் குறைமதிப்பிடுவதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல், முன்னாள் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லா உட்பட பல ஆம் ஆத்மி தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டிய பாஜ்வா, கட்சி ஆட்சிக்கு வந்த சிறிது நேரத்திலேயே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானார். முதல்வர் பகவத் மான் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருந்தாலும், விஜிலென்ஸ் பீரோவால் அவருக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியாததால் சிங்லா நீதிமன்றங்களிலிருந்து ஜாமீன் பெற்றார். தற்போது சிங்லா இப்போது எதுவும் நடக்காதது போல் கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்கிறார்," என்று பஜ்வா கூறினார்.
முன்னாள் ஆம் ஆத்மி அமைச்சர் ஃபௌஜா சிங் சாரரி மிரட்டி பணம் பறிக்கும் திட்டம் பற்றி விவாதித்ததாகக் கூறப்படும் வைரலான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுகளின் தீவிரம் இருந்தபோதிலும், அவரை பாதுகாக்க கட்சி எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதற்கிடையில், பதன்கோட் பஞ்சாயத்து நில மோசடியில் கேபினட் அமைச்சர் லால் சந்த் கட்டாருச்சக்கின் தொடர்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்னும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுக்கவில்லை," என்று லோக் கட்சி குற்றம் சாட்டியது, ஆம் ஆத்மி எம்எல்ஏ அமித் ரத்தன் கோட்ஃபட்டாவும் லஞ்ச வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளது.
இருப்பினும், ஆம் ஆத்மி கட்சி, பகவத் மான் அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், பஞ்சாப் ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் நீல் கார்க் கூறுகையில், “முதல்வரின் உத்தரவுகளுக்குப் பிறகு நாங்கள் எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஊழல்வாதிகளை கைது செய்து வருகிறோம். ஊழலுக்கு எதிரான புகார்களுக்கான எங்கள் ஹெல்ப்லைனில், 1,900 புகார்கள் வந்தன, அவற்றில் 438 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 817 கைதுகள் செய்யப்பட்டன. இப்போது, நாங்கள் அதை மேலும் தீவிரப்படுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.