டெல்லியின் புதிய முதலமைச்சர்! யார் இந்த ரேகா குப்தா?

4 days ago
ARTICLE AD BOX

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான் ரேகா குப்தா டெல்லியின் அடுத்த முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். புது தில்லி MLA பர்வேஷ் வர்மா துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை மாலை கட்சியின் டெல்லி பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஷாலிமார் பாக் தொகுதியைச் சேர்ந்த MLA 50 வயதான ரேகா குப்தா, சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பந்தனா குமாரியை தோற்கடித்தார்.

புது தில்லி MLA பர்வேஷ் குமார் டெல்லி முதலமைச்சராக அறிவிக்கப்படலாம் என்று முதலில் தகவல் வெளியான நிலையில் அவர்  ஓரங்கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து கட்சி தலைமை ரேகா குப்தாவை தேர்வு செய்துள்ளது.

டெல்லியின் புதிய முதல்வர் ஆகிறார் ரேகா குப்தா! பர்வேஷ் வர்மாவுக்கு துணை முதல்வர் பதவி!

யார் இந்த ரேகா குப்தா?

மாணவர் தலைமையில் நீண்ட அரசியல் வாழ்க்கையைக் கொண்ட அனுபவம் வாய்ந்த பாஜக தலைவர் ரேகா குப்தா. தற்போது டெல்லி பாஜகவின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வரும் 50 வயதான இவர், முன்பு BJP யின் மகிளா மோர்ச்சாவின் தேசிய துணைத் தலைவராக இருந்துள்ளார். 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஷாலிமார் பாக் (வடமேற்கு) தொகுதியில் 68,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஒரு வழக்கறிஞரான குப்தா, 1996 முதல் 1997 வரை டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் (DUSU) தலைவராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் அவர் நகராட்சி அரசியலுக்கு மாறினார், 2007 இல் உத்தரி பிதம்புராவில் (வார்டு 54) இருந்து டெல்லி கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்று 2012 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தெற்கு டெல்லி மாநகராட்சியின் மேயராகவும் பணியாற்றியுள்ளார், இது அவரது நிர்வாக நற்சான்றிதழ்களை மேலும் வலுப்படுத்தியது.

டெல்லிக்கான பாஜகவின் உத்தி

ரேகா குப்தாவின் அனுபவத்தையும், தலைநகரை வழிநடத்த ஒரு பெண் தலைவர் வேண்டும் என்ற விருப்பத்தையும் அக்கட்சி  தலைமை பரிசீலித்தது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்பியதால் அறிவிப்பு ஆரம்பத்தில் தாமதமானது. முதல்வர் மற்றும் ஆறு கேபினட் அமைச்சர்களை இறுதி செய்வதற்கு முன்பு, மத்திய பார்வையாளர்கள் அரசியல் நிலவரத்தை மதிப்பிடுவார்கள். பாஜக ஆளும் வேறு சில மாநிலங்களைப் போலல்லாமல், டெல்லியில் துணை முதல்வர் இல்லாமல் இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி 20 ஆம் தேதி பதவியேற்பு

டெல்லி முதலமைச்சர், பதவியேற்பு விழா பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு டெல்லியில் ஒரு நிலையான அரசாங்கத்தை நிறுவுவதை பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது.

Read Entire Article