டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு!

4 days ago
ARTICLE AD BOX

டெல்லியின் முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டெல்லி சட்டசப்பேரவைக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இங்குள்ள, 70 இடங்களில், 48 இடங்களில் வென்று பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. இதனால், 27 ஆண்டுக்குப் பின், டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில், டெல்லி ராம் லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடந்தது. டெல்லியின் முதலமைச்சராக பா.ஜ.க.வின் முதல் முறை எம்.எல்.ஏ.வான ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் டெல்லியின் நான்காவது பெண் முதலமைச்சர் ஆவார்.

அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா துணை முதலமைச்சராக பதவியேற்றார். ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, ரவீந்தர் இந்தராஜ் சிங், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.

Read Entire Article