'டிராகன்' வீக் எண்ட் கலெக்சன் இத்தனை கோடியா? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

2 days ago
ARTICLE AD BOX

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான "டிராகன்" திரைப்படம் கடந்த 21ஆம் தேதி வெளியானது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தமிழ் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

"டிராகன்" திரைப்படம் மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் 50 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துவிட்டதாக, தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

3 நாட்களில் 50.22 கோடி ரூபாய் வசூலித்ததாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து, ஒரு திரைப்படம் பிரம்மாண்டமாக அல்லது அதிக செலவாகவோ, மாஸ் நடிகர்களுடன் இயக்கப்பட்டாலே வெற்றி பெறாது என்பதும், ஒரு படத்தின் வெற்றிக்கு உள்ளடக்கமே (content) முக்கியம் என்பதையும் மக்கள் சினிமாக்காரர்களுக்கு உணர்த்தியுள்ளனர். ரசிகர்கள் இதுகுறித்து கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

"டிராகன்" திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 37 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் விற்பனையில் நல்ல தொகை கிடைத்துள்ளது. தற்போது, மூன்றே நாட்களில் இப்படம் பட்ஜெட்டை மீறி திரையரங்குகளில் அதிகமாக வசூல் செய்திருப்பதால், தயாரிப்பாளர் மிகப்பெரிய லாபம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில், "கோமாளி", "லவ் டுடே", "டிராகன்" என மூன்று தொடர் வெற்றிகளை பிரதீப் ரங்கநாதன் கொடுத்துள்ளார். இதன் மூலம், அவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக மாறிவிட்டார் என்று ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

#Dragon Opening pic.twitter.com/BJyckrx1FA

— Pradeep Ranganathan (@pradeeponelife) February 24, 2025
Read Entire Article