'டிராகன்' படத்தில் முதலில் எனக்கு...வைரலாகும் இன்ஸ்டாவில் கயாடு லோஹர் போட்ட பதிவு

15 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயாடுலோஹர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதனைத்தொடர்ந்து, 2022-ம் ஆண்டு வெளியான ஸ்ரீ விஷ்ணு நடித்த 'அல்லூரி' மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இந்த படம் வரவேற்பை பெறவில்லை. அதனையடுத்து அவருக்கு தெலுங்கு பட வாய்ப்பு வரவில்லை.

அதன்பின்னர் ஒரு மராத்தி மற்றும் மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார். இருந்தபோதும், அவரின் பெயர் அந்த அளவிற்கு வெளியில் தெரியவில்லை. தமிழில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'டிராகன்' படத்தில் நடித்தற்கு பிறகு மிகவும் பிரபலமாகி இருக்கிறார் கயாடு லோஹர்.

இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், டிராகன் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை பகிர்ந்துள்ள கயாடு லோஹர், நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், முதலில் தனக்கு கீர்த்தி கதாபாத்திரம்தான் தரப்பட்டது என்றும் ஆனால் பின்னர் பல்லவி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டதாவும் கூறி இருக்கிறார். மேலும், பல்லவியை நிச்சயம் மக்கள் ரசிப்பார்கள் என்று இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து சொன்னதுபோலவே நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்திஒல் வைரலாகி வருகிறது.

Read Entire Article